• May 17 2024

இலங்கை மின்சார சபை இரு மாதங்களில் ஈட்டிய பெருந்தொகை வருமானம்!

Chithra / Dec 29th 2022, 3:06 pm
image

Advertisement

தற்போதைய கட்டண முறைமையின் அடிப்படையில், இலங்கை மின்சார சபை நவம்பர் மாதத்தில் 35.6 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஒக்டோபர் மாதம் 33.6 பில்லியன் ரூபா வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனவரி மாதத்தில் அனல் மின் நிலையங்களை இயக்குவதற்கு தேவையான உலை எண்ணெய், நப்தா மற்றும் டீசலை கொள்வனவு செய்வதற்கு 35 பில்லியன் ரூபாவும், நிலக்கரி கொள்வனவுக்காக 38.45 பில்லியன் ரூபாவும் தேவைப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, புதிய மின் கட்டண திருத்தம் மற்றும் மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பில் அமைச்சர் காஞ்சன விஜேசேகர பல மின்சார தொழிற்சங்கங்களுடன் இன்று (29) காலை கலந்துரையாடியுள்ளார்.

இலங்கை மின்சார சபையின் செலவு முகாமைத்துவம் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை மின்சார சபை இரு மாதங்களில் ஈட்டிய பெருந்தொகை வருமானம் தற்போதைய கட்டண முறைமையின் அடிப்படையில், இலங்கை மின்சார சபை நவம்பர் மாதத்தில் 35.6 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.அத்துடன், ஒக்டோபர் மாதம் 33.6 பில்லியன் ரூபா வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.எதிர்வரும் ஜனவரி மாதத்தில் அனல் மின் நிலையங்களை இயக்குவதற்கு தேவையான உலை எண்ணெய், நப்தா மற்றும் டீசலை கொள்வனவு செய்வதற்கு 35 பில்லியன் ரூபாவும், நிலக்கரி கொள்வனவுக்காக 38.45 பில்லியன் ரூபாவும் தேவைப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை, புதிய மின் கட்டண திருத்தம் மற்றும் மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பில் அமைச்சர் காஞ்சன விஜேசேகர பல மின்சார தொழிற்சங்கங்களுடன் இன்று (29) காலை கலந்துரையாடியுள்ளார்.இலங்கை மின்சார சபையின் செலவு முகாமைத்துவம் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement