இந்த நாட்களில் மிகவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் சுமார் 70% வரை குறைந்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியல் சங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு 24 மணிநேரமும் மின்சாரம் வழங்க முடியும் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
இந்த நாட்களில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக அந்த நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த இரண்டு நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைந்துள்ள போதிலும், தினசரி நீர் மின் உற்பத்திக்கு தற்போது எந்த தடையும் இல்லை என அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கை மின்சார சபையின் பொறியியல் சங்கம் விடுத்துள்ள அறிவித்தல். இந்த நாட்களில் மிகவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் சுமார் 70% வரை குறைந்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியல் சங்கம் தெரிவித்துள்ளது.எவ்வாறாயினும் தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு 24 மணிநேரமும் மின்சாரம் வழங்க முடியும் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.இந்த நாட்களில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக அந்த நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.இந்த இரண்டு நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைந்துள்ள போதிலும், தினசரி நீர் மின் உற்பத்திக்கு தற்போது எந்த தடையும் இல்லை என அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.