• Apr 02 2025

மெத்தை வழங்குமாறு சாமர சம்பத் விடுத்த கோரிக்கை நிராகரிப்பு..!

Sharmi / Mar 31st 2025, 3:28 pm
image

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, தான் உறங்குவதற்கு மெத்தை வழங்குமாறு விடுத்த கோரிக்கையை மருத்துவர் நிராகரித்துள்ளார்.

நிதி மோசடி குற்றச்சாட்டில் சிறையில் உள்ள சாமர சம்பத் தசநாயக்க, முதுகு வலி காரணமாக சிறையில் இருந்து இந்தக் கோரிக்கையை விடுத்திருந்தார்.

அதன்படி, அந்தக் கோரிக்கை சிறைச்சாலை மருத்துவருக்கு அனுப்பப்பட்டதாகவும், அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும் சிறைச்சாலைத் துறை தெரிவித்துள்ளது.

இதுபோன்ற மெத்தையை வழங்க மருத்துவ பரிந்துரை கட்டாயம் என்பதால், அந்தப் பரிந்துரை இல்லாமல் அதை வழங்க முடியாது என்று சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மெத்தை வழங்குமாறு சாமர சம்பத் விடுத்த கோரிக்கை நிராகரிப்பு. தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, தான் உறங்குவதற்கு மெத்தை வழங்குமாறு விடுத்த கோரிக்கையை மருத்துவர் நிராகரித்துள்ளார்.நிதி மோசடி குற்றச்சாட்டில் சிறையில் உள்ள சாமர சம்பத் தசநாயக்க, முதுகு வலி காரணமாக சிறையில் இருந்து இந்தக் கோரிக்கையை விடுத்திருந்தார்.அதன்படி, அந்தக் கோரிக்கை சிறைச்சாலை மருத்துவருக்கு அனுப்பப்பட்டதாகவும், அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும் சிறைச்சாலைத் துறை தெரிவித்துள்ளது.இதுபோன்ற மெத்தையை வழங்க மருத்துவ பரிந்துரை கட்டாயம் என்பதால், அந்தப் பரிந்துரை இல்லாமல் அதை வழங்க முடியாது என்று சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement