• Apr 02 2025

'சுருக்கமும் ஆக்கமும் ஐந்து கூத்து பனுவல்' நாடக நூலின் வெளியீட்டு நிகழ்வு

Chithra / Mar 31st 2025, 3:37 pm
image


பேராசிரியர் சி.மௌனகுரு எழுதிய சுருக்கமும் ஆக்கமும் ஐந்து கூத்து பனுவல் நாடக நூலின் வெளியீட்டு நிகழ்வு இன்று மட்டக்களப்பு தமிழ் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.

மகுடம் கலை இலக்கிய வட்டமும் மட்டக்களப்பு தமிழ் சங்கமும் இணைந்து இந்த வெளியீட்டு நிகழ்வினை நடாத்தியது.

மட்டக்களப்பு தமிழ் சங்க தலைவர் சைவப்புரவர் வி.ரஞ்சிதமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் பேராசிரியர் கந்தையா ஸ்ரீகணேசன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் பேராசிரியர் சி.மௌனகுரு உட்பட கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், எழுத்தாளர்கள், மாணவர்கள் என பெருளவானோர் கலந்துகொண்டனர்.

இதன்போது நூலின் வெளியீட்டு உரையினை தமிழ் சங்கத்தின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி மு.கணேசராஜா நிகழ்த்தியதை தொடர்ந்து நூல் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது நூலின் முதல் பிரதியினை கிழக்கு பல்கலைக்கழகத்தின் நூலகர் கலாநிதி தீசன் ஜெயராஜ் மற்றும் கவிஞர் வில்சன் சுதாகர் பெற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்வில் நூல் நயவுரையினை இலங்கை கல்வியியலாளர் சேவையின் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.பி.ரவிச்சந்திரா நிகழ்த்தியதுடன் ஏற்புரையினை பேராசிரியர் சி.மௌனகுரு நிகழ்த்தினார்.

இதன்போது இலங்கையின் கூத்தின் வளர்ச்சிக்கு பல்வேறு சேவையாற்றிவரும் பேராசிரியர் சி.மௌனகுருவினை மட்டக்களப்பு தமிழ் சங்கத்தின் சார்பில் கௌரவிக்கப்பட்டார்.


'சுருக்கமும் ஆக்கமும் ஐந்து கூத்து பனுவல்' நாடக நூலின் வெளியீட்டு நிகழ்வு பேராசிரியர் சி.மௌனகுரு எழுதிய சுருக்கமும் ஆக்கமும் ஐந்து கூத்து பனுவல் நாடக நூலின் வெளியீட்டு நிகழ்வு இன்று மட்டக்களப்பு தமிழ் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.மகுடம் கலை இலக்கிய வட்டமும் மட்டக்களப்பு தமிழ் சங்கமும் இணைந்து இந்த வெளியீட்டு நிகழ்வினை நடாத்தியது.மட்டக்களப்பு தமிழ் சங்க தலைவர் சைவப்புரவர் வி.ரஞ்சிதமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் பேராசிரியர் கந்தையா ஸ்ரீகணேசன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.இந்த நிகழ்வில் பேராசிரியர் சி.மௌனகுரு உட்பட கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், எழுத்தாளர்கள், மாணவர்கள் என பெருளவானோர் கலந்துகொண்டனர்.இதன்போது நூலின் வெளியீட்டு உரையினை தமிழ் சங்கத்தின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி மு.கணேசராஜா நிகழ்த்தியதை தொடர்ந்து நூல் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது.இதன்போது நூலின் முதல் பிரதியினை கிழக்கு பல்கலைக்கழகத்தின் நூலகர் கலாநிதி தீசன் ஜெயராஜ் மற்றும் கவிஞர் வில்சன் சுதாகர் பெற்றுக்கொண்டனர்.இந்த நிகழ்வில் நூல் நயவுரையினை இலங்கை கல்வியியலாளர் சேவையின் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.பி.ரவிச்சந்திரா நிகழ்த்தியதுடன் ஏற்புரையினை பேராசிரியர் சி.மௌனகுரு நிகழ்த்தினார்.இதன்போது இலங்கையின் கூத்தின் வளர்ச்சிக்கு பல்வேறு சேவையாற்றிவரும் பேராசிரியர் சி.மௌனகுருவினை மட்டக்களப்பு தமிழ் சங்கத்தின் சார்பில் கௌரவிக்கப்பட்டார்.

Advertisement

Advertisement

Advertisement