• May 03 2024

இன்னும் சிறிது நேரத்தில் நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழைகிறது சந்திரயான்-3 ! samugammedia

Tamil nila / Aug 5th 2023, 7:14 pm
image

Advertisement

இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலம் , இன்று சனிக்கிழமை [5] நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழையும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான்3 விண்கலம் கடந்த மாதம் 14ஆம் திக‌தி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்டது. முதலில், பூமியில் இருந்து குறைந்தபட்சம் 170 கிலோ மீட்டர் தொலைவும், அதிகபட்சம் 36,500 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்றுப்பாதையில் சந்திரயான் 3 விண்கலம் சுற்றத் தொடங்கியது.

மேலும் இந்த நீள்வட்ட சுற்றுப்பாதையை படிப்படியாக உயர்த்தி விண்கலத்தை நிலவுக்கு நெருக்கமாக கொண்டு செல்ல முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. புவி வட்டப்பாதையின் இறுதிச்சுற்றை வெற்றிகரமாக நிறைவு செய்த விண்கலம், கடந்த முதலாம்  திக‌தி  நிலவின் சுற்றுப்பாதையை நோக்கிய பயணத்தை தொடங்கியது.

இன்னும் சிறிது நேரத்தில் நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழைகிறது சந்திரயான்-3 samugammedia இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலம் , இன்று சனிக்கிழமை [5] நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழையும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான்3 விண்கலம் கடந்த மாதம் 14ஆம் திக‌தி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்டது. முதலில், பூமியில் இருந்து குறைந்தபட்சம் 170 கிலோ மீட்டர் தொலைவும், அதிகபட்சம் 36,500 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்றுப்பாதையில் சந்திரயான் 3 விண்கலம் சுற்றத் தொடங்கியது.மேலும் இந்த நீள்வட்ட சுற்றுப்பாதையை படிப்படியாக உயர்த்தி விண்கலத்தை நிலவுக்கு நெருக்கமாக கொண்டு செல்ல முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. புவி வட்டப்பாதையின் இறுதிச்சுற்றை வெற்றிகரமாக நிறைவு செய்த விண்கலம், கடந்த முதலாம்  திக‌தி  நிலவின் சுற்றுப்பாதையை நோக்கிய பயணத்தை தொடங்கியது.

Advertisement

Advertisement

Advertisement