• Sep 28 2024

சந்திரிகா மீண்டும் அரசியலுக்கு வருகிறார் - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைவு! samugammedia

Tamil nila / Nov 6th 2023, 9:04 am
image

Advertisement

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து அரசியல் பணிகளை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 முன்னாள் ஜனாதிபதிக்கு கட்சியில் பதவி மற்றும் பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும் என அவரது தரப்பிலிருந்து யோசனைகளை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடியுள்ளதுடன், அதற்கமைய அவர் எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 இந்த விடயம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவுடன் கலந்துரையாடுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சியின் சிரேஷ்ட தலைமைகள் ஐவரை நியமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்களான மஹிந்த அமரவீர, ஷான் விஜயலால் டி சில்வா, பதில் பொதுச் செயலாளர் துஷ்மந்த மித்ரபால, தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க, பொருளாளராக லசந்த அழகியவண்ண ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த ஐவர் மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு இடையிலான விசேட கலந்துரையாடலொன்று எதிர்வரும் 9 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

கட்சியின் பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கு கட்சியின் தலைவர் போன்ற பதவியை அவருக்கு வழங்குவது பொருத்தமானதாக இருக்கும் என அவர் தரப்பில் இருந்து கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு கட்சி சம்மதிக்கும் பட்சத்தில் இரு பதவிகள் உருவாக்கப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதியின் திடீர் அரசியல் வருகை தொடர்பில் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

சந்திரிகா மீண்டும் அரசியலுக்கு வருகிறார் - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைவு samugammedia முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து அரசியல் பணிகளை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதிக்கு கட்சியில் பதவி மற்றும் பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும் என அவரது தரப்பிலிருந்து யோசனைகளை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.இந்த விடயம் தொடர்பில் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடியுள்ளதுடன், அதற்கமைய அவர் எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவுடன் கலந்துரையாடுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சியின் சிரேஷ்ட தலைமைகள் ஐவரை நியமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்களான மஹிந்த அமரவீர, ஷான் விஜயலால் டி சில்வா, பதில் பொதுச் செயலாளர் துஷ்மந்த மித்ரபால, தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க, பொருளாளராக லசந்த அழகியவண்ண ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.குறித்த ஐவர் மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு இடையிலான விசேட கலந்துரையாடலொன்று எதிர்வரும் 9 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.கட்சியின் பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கு கட்சியின் தலைவர் போன்ற பதவியை அவருக்கு வழங்குவது பொருத்தமானதாக இருக்கும் என அவர் தரப்பில் இருந்து கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு கட்சி சம்மதிக்கும் பட்சத்தில் இரு பதவிகள் உருவாக்கப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது.முன்னாள் ஜனாதிபதியின் திடீர் அரசியல் வருகை தொடர்பில் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement