• Nov 28 2024

பாண் உள்ளிட்ட வெதுப்பக உணவுகளின் விலையில் மாற்றம்..? வெளியான அறிவிப்பு

Chithra / Jan 1st 2024, 8:41 am
image

 

அரங்சாங்கத்தால் பெறுமதிசேர் வரி அதிகரிக்கப்பட்டாலும் பாண் உள்ளிட்ட வெதுப்பக உணவுகளின் விலைகள் அதிகரிக்கப்படாது என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தகவலை அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும்,  15 வீதத்தில் இருந்து 18 வீதமாக அதிகரிக்கப்படவுள்ள பெறுமதிசேர் வரி அதிகரிப்பினால் வெதுப்பக தொழில்துறையினரும், வெதுப்பக உரிமையாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பாண் உள்ளிட்ட வெதுப்பக பொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழும் நாட்டு மக்களை நினைத்து பாண் உள்ளிட்ட வெதுப்பக பொருட்களின் விலையை அதிகரிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டதுடன், 

வரி அதிகரிப்பினால் ஏற்படும் பாரிய நட்டத்தை வெதுப்பக உரிமையாளர்களே சுமக்கவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக வற் வரி அதிகரிப்பினால் வெதுப்பக தொழில் மற்றும் வெதுப்பக உரிமையாளர்களுக்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளமை தொடர்பில் அரசாங்கத்துடன் கலந்துரையாடி தீர்வு எட்டப்படும் என சங்கத்தின் தலைவர் ஜெயவர்தன தெரிவித்தார்.

பாண் உள்ளிட்ட வெதுப்பக உணவுகளின் விலையில் மாற்றம். வெளியான அறிவிப்பு  அரங்சாங்கத்தால் பெறுமதிசேர் வரி அதிகரிக்கப்பட்டாலும் பாண் உள்ளிட்ட வெதுப்பக உணவுகளின் விலைகள் அதிகரிக்கப்படாது என தெரிவிக்கப்படுகிறது.குறித்த தகவலை அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.மேலும்,  15 வீதத்தில் இருந்து 18 வீதமாக அதிகரிக்கப்படவுள்ள பெறுமதிசேர் வரி அதிகரிப்பினால் வெதுப்பக தொழில்துறையினரும், வெதுப்பக உரிமையாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக பாண் உள்ளிட்ட வெதுப்பக பொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.ஆனால் கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழும் நாட்டு மக்களை நினைத்து பாண் உள்ளிட்ட வெதுப்பக பொருட்களின் விலையை அதிகரிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டதுடன், வரி அதிகரிப்பினால் ஏற்படும் பாரிய நட்டத்தை வெதுப்பக உரிமையாளர்களே சுமக்கவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.குறிப்பாக வற் வரி அதிகரிப்பினால் வெதுப்பக தொழில் மற்றும் வெதுப்பக உரிமையாளர்களுக்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளமை தொடர்பில் அரசாங்கத்துடன் கலந்துரையாடி தீர்வு எட்டப்படும் என சங்கத்தின் தலைவர் ஜெயவர்தன தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement