• May 28 2025

ரஷ்ய ஜனாதிபதி பயணித்த ஹெலிகொப்டர் மீது உக்ரைன் தாக்குதல்...!

Sharmi / May 26th 2025, 1:15 pm
image

உக்ரைனின் ஆளில்லா விமானம் ஒன்று புடினின் ஹெலிகொப்டரை தாக்கியுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. 

ரஷ்யாவில் இருந்து வெளிவரும்  செய்தி நிறுவனம் ஒன்று இதனை தெரிவித்துள்ளது.

உக்ரைனுக்கு எதிரான போரில் 3 ஆண்டுகளாக ரஷ்யா ஈடுபட்டு வருகிறது. போரால் பெண்கள், வீரர்கள் என இலட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

போரை முடிவுக்கு கொண்டு வர ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு மத்தியஸ்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், அதில் முடிவு எதுவும் எட்டப்படாத நிலை காணப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் குர்ஸ்க் ஓபிளாஸ்ட் என்ற பகுதிக்கு ஹெலிகொப்டரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அப்போது, உக்ரைனின் ஆளில்லா விமானம் ஒன்று புடினின் ஹெலிகொப்டரை தாக்கியுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 

இந்த சூழலில், ரஷ்ய வான் பாதுகாப்பு படை தளபதியான யூரி டாஷ்கின் கூறும்போது,

புதினின் வான்வெளி பயணம் சீராக இருக்கும் வகையில், அதனை பாதுகாத்ததுடன், ட்ரோன் தாக்குதலுக்கு எதிராக ரஷ்ய படைகள் செயல்பட்டன என தெரிவித்தார்.

நாங்கள் உடனடியாக வான் பாதுகாப்புக்கான போரில் ஈடுபட்டோம். தொடர்ந்து போரிட்டு அதனை முறியடித்து வெற்றி பெற்றோம். புடினின் பயணத்திற்கான வான்வெளி பாதுகாப்பையும் உறுதி செய்தோம் எனவும் தெரிவித்தார்.

ரஷ்ய ஜனாதிபதி பயணித்த ஹெலிகொப்டர் மீது உக்ரைன் தாக்குதல். உக்ரைனின் ஆளில்லா விமானம் ஒன்று புடினின் ஹெலிகொப்டரை தாக்கியுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.  ரஷ்யாவில் இருந்து வெளிவரும்  செய்தி நிறுவனம் ஒன்று இதனை தெரிவித்துள்ளது.உக்ரைனுக்கு எதிரான போரில் 3 ஆண்டுகளாக ரஷ்யா ஈடுபட்டு வருகிறது. போரால் பெண்கள், வீரர்கள் என இலட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.போரை முடிவுக்கு கொண்டு வர ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு மத்தியஸ்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், அதில் முடிவு எதுவும் எட்டப்படாத நிலை காணப்படுகிறது.இந்நிலையில் சமீபத்தில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் குர்ஸ்க் ஓபிளாஸ்ட் என்ற பகுதிக்கு ஹெலிகொப்டரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, உக்ரைனின் ஆளில்லா விமானம் ஒன்று புடினின் ஹெலிகொப்டரை தாக்கியுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்த சூழலில், ரஷ்ய வான் பாதுகாப்பு படை தளபதியான யூரி டாஷ்கின் கூறும்போது, புதினின் வான்வெளி பயணம் சீராக இருக்கும் வகையில், அதனை பாதுகாத்ததுடன், ட்ரோன் தாக்குதலுக்கு எதிராக ரஷ்ய படைகள் செயல்பட்டன என தெரிவித்தார்.நாங்கள் உடனடியாக வான் பாதுகாப்புக்கான போரில் ஈடுபட்டோம். தொடர்ந்து போரிட்டு அதனை முறியடித்து வெற்றி பெற்றோம். புடினின் பயணத்திற்கான வான்வெளி பாதுகாப்பையும் உறுதி செய்தோம் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement