• Nov 22 2024

'நாய்பட்டிமுனை', 'நற்பிட்டிமுனை'' என மாற்றம்

Chithra / Jul 14th 2024, 3:01 pm
image

 

அம்பாறை மாவட்டத்தில் கடந்த காலங்களில் அக்கரைப்பற்று பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் பிரிவில் கல்முனை பிரதான அஞ்சல் அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழுள்ள நாய்பட்டிமுனை உப அஞ்சல் அலுவலகம், 2024.04.02 அன்று தொடக்கம் நற்பிட்டிமுனை உப தபாற் கந்தோர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் நற்பிட்டிமுனை அனைத்து பள்ளிவாசல் தலைவர் ஜெ.எம் றிஸான் (ஹாமி) உட்பட நிர்வாகிகள், அஞ்சல் அலுவலக உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்ததை தொடர்ந்து 2024.05.31 திகதி வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக குறித்த பெயர் மாற்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி குறித்த உப தபாற் கந்தோரின் பழைய பெயர் பலகை அஞ்சல் மா அதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி.சத்குமாரவின் உத்தரவிற்கமைய  அகற்றப்பட்டு தற்போது புதிய பெயர் பலகை பொருத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய இனிவரும் காலங்களில் நற்பிட்டிமுனை உப தபாற் கந்தோர் என அழைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த செயற்பாட்டை முன்னெடுத்த நற்பிட்டிமுனை அனைத்து பள்ளிவாசல் தலைவர் உட்பட பலருக்கு நற்பிட்டிமுனை பொதுமக்கள் தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.


'நாய்பட்டிமுனை', 'நற்பிட்டிமுனை'' என மாற்றம்  அம்பாறை மாவட்டத்தில் கடந்த காலங்களில் அக்கரைப்பற்று பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் பிரிவில் கல்முனை பிரதான அஞ்சல் அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழுள்ள நாய்பட்டிமுனை உப அஞ்சல் அலுவலகம், 2024.04.02 அன்று தொடக்கம் நற்பிட்டிமுனை உப தபாற் கந்தோர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக குறிப்பிடப்பட்டுள்ளது.இவ்விடயம் தொடர்பில் நற்பிட்டிமுனை அனைத்து பள்ளிவாசல் தலைவர் ஜெ.எம் றிஸான் (ஹாமி) உட்பட நிர்வாகிகள், அஞ்சல் அலுவலக உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்ததை தொடர்ந்து 2024.05.31 திகதி வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக குறித்த பெயர் மாற்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.இதன்படி குறித்த உப தபாற் கந்தோரின் பழைய பெயர் பலகை அஞ்சல் மா அதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி.சத்குமாரவின் உத்தரவிற்கமைய  அகற்றப்பட்டு தற்போது புதிய பெயர் பலகை பொருத்தப்பட்டுள்ளது.இதற்கமைய இனிவரும் காலங்களில் நற்பிட்டிமுனை உப தபாற் கந்தோர் என அழைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன் குறித்த செயற்பாட்டை முன்னெடுத்த நற்பிட்டிமுனை அனைத்து பள்ளிவாசல் தலைவர் உட்பட பலருக்கு நற்பிட்டிமுனை பொதுமக்கள் தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement