• Oct 30 2024

காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்- மக்களே அவதானம்! samugammedia

Tamil nila / May 19th 2023, 5:00 pm
image

Advertisement

நாட்டில் நிலவும் வெப்பம் மேலும் அதிகரிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.  

இதன்படி வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மொனராகலை மாவட்டத்திலும் அதிகரித்த வெப்பம் நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் போதுமானளவு நீரை அருந்துமாறும், இயலுமான வரை நிழலான பகுதிகளில் ஓய்வெடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்குட்பட்ட சில இடங்களில் இன்று பிற்பகல் அல்லது இரவு வேளையில், இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் நிலவுவதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்- மக்களே அவதானம் samugammedia நாட்டில் நிலவும் வெப்பம் மேலும் அதிகரிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.  இதன்படி வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மொனராகலை மாவட்டத்திலும் அதிகரித்த வெப்பம் நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் போதுமானளவு நீரை அருந்துமாறும், இயலுமான வரை நிழலான பகுதிகளில் ஓய்வெடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.இதேவேளை மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்குட்பட்ட சில இடங்களில் இன்று பிற்பகல் அல்லது இரவு வேளையில், இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் நிலவுவதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement