• Nov 14 2024

வெளிச்செல்லல் வரியில் ஏற்படவுள்ள மாற்றம் - பயணிகளுக்கு அரசின் மகிழ்ச்சி அறிவிப்பு..!

Chithra / Feb 20th 2024, 3:57 pm
image

 

பயணிகள் போக்குவரத்து படகு மற்றும் சுற்றுலா கப்பல்கள் மூலம் இலங்கையிலிருந்து வெளியேறிச் செல்லும் பயணிகளிடமிருந்து அறிவிடப்படும் வெளிச்செல்லல் வரியை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான யோசனையொன்றுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, பயணிகள் போக்குவரத்துப் படகுகள் மற்றும் கப்பல்கள் மூலம் இலங்கையிலிருந்து வெளியேறிச் செல்லும் பயணிகளிடமிருந்து தற்போது அறிவிடப்படும் வெளிச்செல்லல் வரி முறையே 5 அமெரிக்க டொலர்கள் மற்றும் 20 அமெரிக்க டொலர்களாகக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், படகுப் பயணி ஒருவருக்கு 60 கிலோ வரையான பயணப் பொதிகளுக்கான கட்டணத்தை விலக்களிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.

வெளிச்செல்லல் வரியில் ஏற்படவுள்ள மாற்றம் - பயணிகளுக்கு அரசின் மகிழ்ச்சி அறிவிப்பு.  பயணிகள் போக்குவரத்து படகு மற்றும் சுற்றுலா கப்பல்கள் மூலம் இலங்கையிலிருந்து வெளியேறிச் செல்லும் பயணிகளிடமிருந்து அறிவிடப்படும் வெளிச்செல்லல் வரியை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான யோசனையொன்றுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.அதற்கமைய, பயணிகள் போக்குவரத்துப் படகுகள் மற்றும் கப்பல்கள் மூலம் இலங்கையிலிருந்து வெளியேறிச் செல்லும் பயணிகளிடமிருந்து தற்போது அறிவிடப்படும் வெளிச்செல்லல் வரி முறையே 5 அமெரிக்க டொலர்கள் மற்றும் 20 அமெரிக்க டொலர்களாகக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.அத்துடன், படகுப் பயணி ஒருவருக்கு 60 கிலோ வரையான பயணப் பொதிகளுக்கான கட்டணத்தை விலக்களிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement