• May 01 2024

கோழி இறைச்சியின் விலை மீண்டும் உயர்வு..!

Chithra / Apr 15th 2024, 3:29 pm
image

Advertisement


பண்டிகைக் காலங்களில் கோழி இறைச்சியின் விலையை வியாபாரிகள்  தன்னிச்சையாக உயர்த்தி வருவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

பண்டிகைக் காலங்களில் கோழி  இறைச்சி மற்றும் முட்டைகளின் விலை குறைக்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்த போதிலும் அவ்வாறான நிலைமை சந்தையில் காணப்படவில்லையென மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

முன்னர் கோழி இறைச்சியின் விலையானது 1,100 ரூபாவாக காணப்பட்டதோடு, தற்போது 1 கிலோ கோழி இறைச்சியின் விலையானது  1,500 ரூபாவாக காணப்படுகின்றது.

இதேவேளை, அதிகரித்துள்ள இறைச்சி மற்றும் முட்டையினது விலை எதிர்வரும் நாட்களில் குறைக்கப்படும் என கோழி பண்ணையாளர்கள் சங்கத்தின்  தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.


கோழி இறைச்சியின் விலை மீண்டும் உயர்வு. பண்டிகைக் காலங்களில் கோழி இறைச்சியின் விலையை வியாபாரிகள்  தன்னிச்சையாக உயர்த்தி வருவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.பண்டிகைக் காலங்களில் கோழி  இறைச்சி மற்றும் முட்டைகளின் விலை குறைக்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்த போதிலும் அவ்வாறான நிலைமை சந்தையில் காணப்படவில்லையென மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.முன்னர் கோழி இறைச்சியின் விலையானது 1,100 ரூபாவாக காணப்பட்டதோடு, தற்போது 1 கிலோ கோழி இறைச்சியின் விலையானது  1,500 ரூபாவாக காணப்படுகின்றது.இதேவேளை, அதிகரித்துள்ள இறைச்சி மற்றும் முட்டையினது விலை எதிர்வரும் நாட்களில் குறைக்கப்படும் என கோழி பண்ணையாளர்கள் சங்கத்தின்  தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement