• Nov 22 2024

13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த முடியாதாம் - எந்த நாட்டில் தெரியுமா?

Tharun / Jul 30th 2024, 9:11 pm
image

ஆஸ்திரேலியா சிட்னியில்  இப்போது 13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த அனுமதி இல்லை. இதற்கிடையே இந்த வயதை 16ஆக உயர்த்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

குறிப்பாக அங்குள்ள பல அரசியல்வாதிகள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் வயதை 16ஆக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதற்கான காரணத்தை நாம் பார்க்கலாம்.

இந்த காலத்தில் சமூக வலைத்தளங்கள் என்பது தவிர்க்கவே முடியாத ஒன்றாகிவிட்டது. பள்ளி மாணவ, மாணவிகள் கூட இந்தக் காலத்தில் தினசரி பல மணி நேரம் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துகின்றனர்.

அதேநேரம் இதுபோல அதிக நேரம் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தினால் அது சிறுவர்கள் மற்றும் இளைஞர்களிடையே மன ரீதியான மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் மனச்சோர்வு மற்றும் பதட்டம் ஆகியவற்றை ஏற்படுத்தும் என்று சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கும் நிலையில், இந்த கோரிக்கை அங்கே எழுந்துள்ளது. சமூக வலைத்தளங்களை அதிகமாக அல்லது தவறாகப் பயன்படுத்துவது உளவியல் ரீதியான பாதிப்புகளையும் கூட ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இளம் பருவத்தினர் இடையே தாங்கள் யார் என்பதை அடையாளம் காணும் Identity developmentஇல் கூட சிக்கல் ஏற்படும் என்று வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த Identity development என்பது இளமைப் பருவத்தினருக்கு மிக முக்கியமானது.. நீங்கள் யார், நீங்கள் என்ன ஆக விரும்புகிறீர்கள், உங்கள் அடிப்படை மதிப்புகள் என்ன. உங்கள் எதிர்காலம் எப்படிச் செல்ல வேண்டும் என அனைத்தையும் இந்த காலகட்டத்தில் தான் நீங்கள் தீர்மானிக்கிறீர்கள்.

இந்த செயல்முறையை சமூக வலைத்தளங்கள் கடுமையாகப் பாதிக்கிறது. 11 மற்றும் 15 வயதில் இதுபோல நமக்கான அடையாளத்தை உருவாக்கும் போது, மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்ற கருத்துகளுக்கு நமது மூளை அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. இந்த காலகட்டத்தில் நமது மூளை மிகவும் சென்டிசிட்டிவாகவும் இருக்கிறது. நமது மூளை விமர்சனத்தை எதிர்கொள்வது, சுயக்கட்டுப்பாடு ஆகியவற்றை முறையாகக் கையாள கற்றுக் கொள்ள 20 வயது வரை ஆவதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

பதின்ம வயதினர் எப்போதும் தங்களை மற்றவர்களுடன் ஒப்பிடுகிறார்கள். இந்த நேரத்தில் அவர்கள் அதிகளவில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது அவர்கள் மீது எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்துகிறது. இதுபோல அதிகப்படியாகத் தன்னை மற்றவர்களுடன் தொடர்ந்து ஒப்பிட்டுக் கொண்டே இருப்பது உளவியல் பாதிப்புகளையும் ஏற்படுத்தலாம்.

மேலும், இந்தக் காலத்தில் இளைஞர்களின் கருத்தியல் பெரும்பாலும் சமூக வலைத்தளங்களிலேயே தீர்மானிக்கப்படுகிறது. குறிப்பிட்ட வகையான கருத்துகள் மட்டுமே காட்டப்படுவதால் சமூக வலைத்தளங்களைப் பார்த்து அவர்களின் கருத்தியல் முடிவாகிறது. இவை பெரும்பாலும் எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை என்ற போதிலும், சில நேரங்களில் அது சிக்கலை ஏற்படுத்துகிறது. அதிலும் இப்போது உலகில் சகிப்புத்தன்மை குறைந்து வரும் நிலையில், சமூக ஊடகங்கள் மூலம் இளைஞர்களை எளிதாக மூளைச்சலவை செய்ய முடிகிறது.

இதை எல்லாம் கருத்தில் கொண்டே சிறுவர்களை சமூக வலைத்தளங்களில் அனுமதிக்கக் கூடாது என்ற கோரிக்கை ஆஸ்திரேலியாவில் எழுந்துள்ளது. சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தக் குறைந்தபட்ச வயதை 16ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைக்கும் ஆதரவு அதிகரித்துள்ளது.

13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த முடியாதாம் - எந்த நாட்டில் தெரியுமா ஆஸ்திரேலியா சிட்னியில்  இப்போது 13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த அனுமதி இல்லை. இதற்கிடையே இந்த வயதை 16ஆக உயர்த்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.குறிப்பாக அங்குள்ள பல அரசியல்வாதிகள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் வயதை 16ஆக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதற்கான காரணத்தை நாம் பார்க்கலாம்.இந்த காலத்தில் சமூக வலைத்தளங்கள் என்பது தவிர்க்கவே முடியாத ஒன்றாகிவிட்டது. பள்ளி மாணவ, மாணவிகள் கூட இந்தக் காலத்தில் தினசரி பல மணி நேரம் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துகின்றனர்.அதேநேரம் இதுபோல அதிக நேரம் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தினால் அது சிறுவர்கள் மற்றும் இளைஞர்களிடையே மன ரீதியான மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் மனச்சோர்வு மற்றும் பதட்டம் ஆகியவற்றை ஏற்படுத்தும் என்று சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கும் நிலையில், இந்த கோரிக்கை அங்கே எழுந்துள்ளது. சமூக வலைத்தளங்களை அதிகமாக அல்லது தவறாகப் பயன்படுத்துவது உளவியல் ரீதியான பாதிப்புகளையும் கூட ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக இளம் பருவத்தினர் இடையே தாங்கள் யார் என்பதை அடையாளம் காணும் Identity developmentஇல் கூட சிக்கல் ஏற்படும் என்று வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த Identity development என்பது இளமைப் பருவத்தினருக்கு மிக முக்கியமானது. நீங்கள் யார், நீங்கள் என்ன ஆக விரும்புகிறீர்கள், உங்கள் அடிப்படை மதிப்புகள் என்ன. உங்கள் எதிர்காலம் எப்படிச் செல்ல வேண்டும் என அனைத்தையும் இந்த காலகட்டத்தில் தான் நீங்கள் தீர்மானிக்கிறீர்கள்.இந்த செயல்முறையை சமூக வலைத்தளங்கள் கடுமையாகப் பாதிக்கிறது. 11 மற்றும் 15 வயதில் இதுபோல நமக்கான அடையாளத்தை உருவாக்கும் போது, மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்ற கருத்துகளுக்கு நமது மூளை அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. இந்த காலகட்டத்தில் நமது மூளை மிகவும் சென்டிசிட்டிவாகவும் இருக்கிறது. நமது மூளை விமர்சனத்தை எதிர்கொள்வது, சுயக்கட்டுப்பாடு ஆகியவற்றை முறையாகக் கையாள கற்றுக் கொள்ள 20 வயது வரை ஆவதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.பதின்ம வயதினர் எப்போதும் தங்களை மற்றவர்களுடன் ஒப்பிடுகிறார்கள். இந்த நேரத்தில் அவர்கள் அதிகளவில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது அவர்கள் மீது எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்துகிறது. இதுபோல அதிகப்படியாகத் தன்னை மற்றவர்களுடன் தொடர்ந்து ஒப்பிட்டுக் கொண்டே இருப்பது உளவியல் பாதிப்புகளையும் ஏற்படுத்தலாம்.மேலும், இந்தக் காலத்தில் இளைஞர்களின் கருத்தியல் பெரும்பாலும் சமூக வலைத்தளங்களிலேயே தீர்மானிக்கப்படுகிறது. குறிப்பிட்ட வகையான கருத்துகள் மட்டுமே காட்டப்படுவதால் சமூக வலைத்தளங்களைப் பார்த்து அவர்களின் கருத்தியல் முடிவாகிறது. இவை பெரும்பாலும் எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை என்ற போதிலும், சில நேரங்களில் அது சிக்கலை ஏற்படுத்துகிறது. அதிலும் இப்போது உலகில் சகிப்புத்தன்மை குறைந்து வரும் நிலையில், சமூக ஊடகங்கள் மூலம் இளைஞர்களை எளிதாக மூளைச்சலவை செய்ய முடிகிறது.இதை எல்லாம் கருத்தில் கொண்டே சிறுவர்களை சமூக வலைத்தளங்களில் அனுமதிக்கக் கூடாது என்ற கோரிக்கை ஆஸ்திரேலியாவில் எழுந்துள்ளது. சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தக் குறைந்தபட்ச வயதை 16ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைக்கும் ஆதரவு அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement