• Nov 24 2024

கண்ணில் மிளகாய் தூள் தூவி ஆசிரியையின் கழுத்தில் இருந்த சங்கிலி கொள்ளை!

Tamil nila / Jul 3rd 2024, 8:10 pm
image

பசறை கொட்டமுதுன பகுதியில் ஆசிரியர் ஒருவரின் கழுத்தில் இருந்த சங்கிலியை கண்ணுக்குள் மிளகாய் தூள் தூவி விட்டு திருடிச் சென்ற சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 23 வயதுடைய புத்தலை பெல்வத்தை பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று மாலை பாடசாலை முடிந்து வீடு செல்லும் வழியில் மறைந்திருந்த நபர் ஒருவர் அவ்வழியே சென்று கொண்டிருந்த ஆசிரியையின் கண்ணுக்கு மிளகாய் தூள் தூவி விட்டு கழுத்தில் இருந்த சங்கிலியை அறுத்து கொண்டு காட்டுக்குள் ஓடியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் ஊர் மக்களும் பொலிஸாரும் இணைந்து நேற்று மாலை காட்டுப்பகுதியில் தேடிய போதிலும் சந்தேகநபரை பிடிக்க முடியவில்லை. இருப்பினும் இன்று அதிகாலை காட்டுக்குள் இருந்த சந்தேகநபர் வீதிக்கு வந்து பேருந்தில் ஏற முற்பட்ட போது மறைந்திருந்த ஊர் மக்களும் பொலிஸாரும் சந்தேக நபரை மடக்கி பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் போது தான் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை சந்தேக நபர் அறுத்து கொண்டு ஓடுகையில் அது தங்க சங்கிலி அல்ல பித்தளை சங்கிலி என சந்தேக நபரிடம் கூறியதாக குறித்த ஆசிரியர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

சந்தேக நபரை பசறை நீதிவான் நீதிமன்றதாதில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


கண்ணில் மிளகாய் தூள் தூவி ஆசிரியையின் கழுத்தில் இருந்த சங்கிலி கொள்ளை பசறை கொட்டமுதுன பகுதியில் ஆசிரியர் ஒருவரின் கழுத்தில் இருந்த சங்கிலியை கண்ணுக்குள் மிளகாய் தூள் தூவி விட்டு திருடிச் சென்ற சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 23 வயதுடைய புத்தலை பெல்வத்தை பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.நேற்று மாலை பாடசாலை முடிந்து வீடு செல்லும் வழியில் மறைந்திருந்த நபர் ஒருவர் அவ்வழியே சென்று கொண்டிருந்த ஆசிரியையின் கண்ணுக்கு மிளகாய் தூள் தூவி விட்டு கழுத்தில் இருந்த சங்கிலியை அறுத்து கொண்டு காட்டுக்குள் ஓடியதாக பொலிஸார் தெரிவித்தனர்.பின்னர் ஊர் மக்களும் பொலிஸாரும் இணைந்து நேற்று மாலை காட்டுப்பகுதியில் தேடிய போதிலும் சந்தேகநபரை பிடிக்க முடியவில்லை. இருப்பினும் இன்று அதிகாலை காட்டுக்குள் இருந்த சந்தேகநபர் வீதிக்கு வந்து பேருந்தில் ஏற முற்பட்ட போது மறைந்திருந்த ஊர் மக்களும் பொலிஸாரும் சந்தேக நபரை மடக்கி பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன் போது தான் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை சந்தேக நபர் அறுத்து கொண்டு ஓடுகையில் அது தங்க சங்கிலி அல்ல பித்தளை சங்கிலி என சந்தேக நபரிடம் கூறியதாக குறித்த ஆசிரியர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.சந்தேக நபரை பசறை நீதிவான் நீதிமன்றதாதில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement