• Jan 11 2025

வெருகலில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கு சீனாவால் உணவுப் பொதிகள்

Chithra / Jan 9th 2025, 2:56 pm
image

 

அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வெருகல் பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 50 குடும்பங்களுக்கு இன்று வியாழக்கிழமை (09) உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

வெருகல் பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் சோ.சௌமியா, நிருவாக கிராம உத்தியோகத்தர் சிறிகாந்தராசா காளிப்பிள்ளை, வெருகல் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இணைந்து இவ் உலருணவுப் பொதிகளை பயனாளிகளுக்கு வழங்கி வைத்தனர்.

சீன அரசாங்கத்தினால், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு வழங்குவதற்காக இவ் உலருணவுப் பொதிகள் அரசாங்கத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  


வெருகலில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கு சீனாவால் உணவுப் பொதிகள்  அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வெருகல் பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 50 குடும்பங்களுக்கு இன்று வியாழக்கிழமை (09) உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.வெருகல் பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் சோ.சௌமியா, நிருவாக கிராம உத்தியோகத்தர் சிறிகாந்தராசா காளிப்பிள்ளை, வெருகல் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இணைந்து இவ் உலருணவுப் பொதிகளை பயனாளிகளுக்கு வழங்கி வைத்தனர்.சீன அரசாங்கத்தினால், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு வழங்குவதற்காக இவ் உலருணவுப் பொதிகள் அரசாங்கத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement

Advertisement