• Oct 29 2025

மணிக்கு 896 கிலோ மீற்றர் வேகத்தில் , உலகின் அதிவேக புல்லட் தொடருந்து, உலக சாதனைபடைத்த சீனா.

dorin / Oct 27th 2025, 6:51 pm
image

உலகின் அதிவேக புல்லட் தொடருந்தின் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நடத்தி சீனா புதிய சாதனை படைத்துள்ளது.

ஜப்பானின் (Japan) எல்.ஓ சீரிஸ் மாக்லேவ் தொடருந்து மணிக்கு 603 கிலோ மீற்றர் வேகத்தில் பயணித்து சாதனை படைத்திருந்தது.

இதனை முறியடிக்கும் வகையில் மணிக்கு 896 கிலோ மீற்றர் வேகத்தில் இயங்கக்கூடிய சி.ஆர் 450 என பெயரிடப்பட்ட தொடருந்தை சீனா உருவாக்கியுள்ளமையானது பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது .

குறித்த தொடருந்து சீனாவின் ஷாங்காய் - செங்டு வழித்தடத்தில் இயக்கப்படவுள்ள அதே நேரம்

சி.ஆர் 450 புல்லட் தொடருந்தில் தொழில்நுட்ப ரீதியில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

பொறியியல் ஆய்வு மற்றும் பாதுகாப்பு அனுமதி இறுதிக் கட்டத்தில் உள்ள நிலையில் சோதனை ஓட்டத்திற்கு பின் சி.ஆர் 450 தொடருந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மணிக்கு 896 கிலோ மீற்றர் வேகத்தில் , உலகின் அதிவேக புல்லட் தொடருந்து, உலக சாதனைபடைத்த சீனா. உலகின் அதிவேக புல்லட் தொடருந்தின் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நடத்தி சீனா புதிய சாதனை படைத்துள்ளது.ஜப்பானின் (Japan) எல்.ஓ சீரிஸ் மாக்லேவ் தொடருந்து மணிக்கு 603 கிலோ மீற்றர் வேகத்தில் பயணித்து சாதனை படைத்திருந்தது.இதனை முறியடிக்கும் வகையில் மணிக்கு 896 கிலோ மீற்றர் வேகத்தில் இயங்கக்கூடிய சி.ஆர் 450 என பெயரிடப்பட்ட தொடருந்தை சீனா உருவாக்கியுள்ளமையானது பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது .குறித்த தொடருந்து சீனாவின் ஷாங்காய் - செங்டு வழித்தடத்தில் இயக்கப்படவுள்ள அதே நேரம் சி.ஆர் 450 புல்லட் தொடருந்தில் தொழில்நுட்ப ரீதியில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.பொறியியல் ஆய்வு மற்றும் பாதுகாப்பு அனுமதி இறுதிக் கட்டத்தில் உள்ள நிலையில் சோதனை ஓட்டத்திற்கு பின் சி.ஆர் 450 தொடருந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement