• Apr 12 2026

கால்நடைகளுக்கு ஏற்பட்ட கோமாரி நோய், பிரித்தானிய சீஸ், இறைச்சிக்குத் தடை.

dorin / Oct 27th 2025, 7:04 pm
image

பிரித்தானிய அரசு 2025 ஏப்ரல் மாதம் முதல், தனிப்பட்ட பயன்பாட்டிற்கு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து சீஸ்,இறைச்சி மற்றும் பால் சார்ந்த உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளது.

இந்தத் தடை, ஐரோப்பாவில் கால்நடைகளுக்கு பரவிய கோமாரி நோய் (Foot and Mouth Disease)

பரவலை தடுப்பதற்காக எடுத்த நடவடிக்கையாகும். விதிகளை மீறுபவர்கள்

5000 பவுண்டு அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.

தடை கடந்த 6 மாதங்களாக தொடர்ந்தாலும், நோய் பரவல் தற்போது கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது.

இருப்பினும், பிரித்தானிய அரசு, “நோய் அபாயம் குறைந்தாலும், விவசாயிகளையும் உணவுப் பாதுகாப்பையும் பாதுகாக்க தடை தொடரும்” என அறிவித்துள்ளது.

பாரிஸ் நகரில் உள்ள சீஸ் கடைகள், குறிப்பாக Eurostar ரயில்கள் செல்லும் Gare du Nord பகுதியில், இந்த தடை காரணமாக பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்ததால் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.

சீஸ் பிரான்ஸ் கலாச்சாரத்தின் ஒரு முக்கியப் பகுதியாக இருப்பதால்,சுற்றுலாப் பயணிகள் அதை நினைவுப் பொருளாக எடுத்துச் செல்லும் பழக்கம்கொண்டுள்ளனர்.

இந்தத் தடை பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறவுகளில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது. கோமாரி நோய் மனிதர்களுக்கு ஆபத்தானதாக இல்லாவிட்டாலும்,

கால்நடைகளுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்.

கடந்த 2001-ஆம் ஆண்டு பிரித்தானியாவில் 6 மில்லியன் கால்நடைகள்

அழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

தற்போது நோய் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இருப்பினும்,

தடை தொடர்ந்திருக்கிறதற்கான அவசியம் மீண்டும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

கால்நடைகளுக்கு ஏற்பட்ட கோமாரி நோய், பிரித்தானிய சீஸ், இறைச்சிக்குத் தடை. பிரித்தானிய அரசு 2025 ஏப்ரல் மாதம் முதல், தனிப்பட்ட பயன்பாட்டிற்கு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து சீஸ்,இறைச்சி மற்றும் பால் சார்ந்த உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளது.இந்தத் தடை, ஐரோப்பாவில் கால்நடைகளுக்கு பரவிய கோமாரி நோய் (Foot and Mouth Disease) பரவலை தடுப்பதற்காக எடுத்த நடவடிக்கையாகும். விதிகளை மீறுபவர்கள்5000 பவுண்டு அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.தடை கடந்த 6 மாதங்களாக தொடர்ந்தாலும், நோய் பரவல் தற்போது கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இருப்பினும், பிரித்தானிய அரசு, “நோய் அபாயம் குறைந்தாலும், விவசாயிகளையும் உணவுப் பாதுகாப்பையும் பாதுகாக்க தடை தொடரும்” என அறிவித்துள்ளது.பாரிஸ் நகரில் உள்ள சீஸ் கடைகள், குறிப்பாக Eurostar ரயில்கள் செல்லும் Gare du Nord பகுதியில், இந்த தடை காரணமாக பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்ததால் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. சீஸ் பிரான்ஸ் கலாச்சாரத்தின் ஒரு முக்கியப் பகுதியாக இருப்பதால்,சுற்றுலாப் பயணிகள் அதை நினைவுப் பொருளாக எடுத்துச் செல்லும் பழக்கம்கொண்டுள்ளனர்.இந்தத் தடை பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறவுகளில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது. கோமாரி நோய் மனிதர்களுக்கு ஆபத்தானதாக இல்லாவிட்டாலும், கால்நடைகளுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். கடந்த 2001-ஆம் ஆண்டு பிரித்தானியாவில் 6 மில்லியன் கால்நடைகள் அழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.தற்போது நோய் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இருப்பினும், தடை தொடர்ந்திருக்கிறதற்கான அவசியம் மீண்டும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement