• Oct 31 2024

தமது விண்வெளி நிலையத்துக்கு 3 வீரர்களை அனுப்பிய சீனா!

Tamil nila / Oct 30th 2024, 6:43 pm
image

Advertisement

சீனா சொந்தமாக விண்வெளி நிலையத்தை அமைத்து உள்ளது.

இந்த நிலையில் விண்வெளி நிலையத்துக்கு முதல் பெண் விண்வெளி என்ஜினீயர் உட்பட  3 விண்வெளி வீரர்களை சீனா அனுப்பியது. அவர்கள் இன்று அதிகாலை ஷென்சோ-19 விண்கலத்தில் புறப்பட்டனர்.

இந்த விண்கலம் வடமேற்கு சீனாவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுகணை மையத்தில் இருந்து லாங் மார்ச்-2எப் கேரியர் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. 

ஏவப்பட்ட 10 நிமிடங்களுக்குப் பிறகு, ஷென்சோ-19 விண்கலம் ராக்கெட்டிலிருந்து பிரிந்து நிர்ணயிக்கப்பட்ட சுற்றுப்பாதையை வெற்றிகரமாக சென்றடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 விண்வெளி வீரர்களும் 6 மாதம் தங்கிருந்து ஆராய்ச்சி பணியில் ஈடுபட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது

தமது விண்வெளி நிலையத்துக்கு 3 வீரர்களை அனுப்பிய சீனா சீனா சொந்தமாக விண்வெளி நிலையத்தை அமைத்து உள்ளது.இந்த நிலையில் விண்வெளி நிலையத்துக்கு முதல் பெண் விண்வெளி என்ஜினீயர் உட்பட  3 விண்வெளி வீரர்களை சீனா அனுப்பியது. அவர்கள் இன்று அதிகாலை ஷென்சோ-19 விண்கலத்தில் புறப்பட்டனர்.இந்த விண்கலம் வடமேற்கு சீனாவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுகணை மையத்தில் இருந்து லாங் மார்ச்-2எப் கேரியர் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. ஏவப்பட்ட 10 நிமிடங்களுக்குப் பிறகு, ஷென்சோ-19 விண்கலம் ராக்கெட்டிலிருந்து பிரிந்து நிர்ணயிக்கப்பட்ட சுற்றுப்பாதையை வெற்றிகரமாக சென்றடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.3 விண்வெளி வீரர்களும் 6 மாதம் தங்கிருந்து ஆராய்ச்சி பணியில் ஈடுபட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Advertisement

Advertisement

Advertisement