புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு அகழ்வுப்பணி முன்னெடுப்பதற்கான நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட மந்துவில் பகுதியில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் தனியார் காணியொன்றில் பதுங்கு குழிக்குள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் குறித்த அகழ்வுப்பணிக்கான ஆயத்த பணி இடம்பெற்று வருகின்றது.
புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர் ஹெரத் தலைமையிலான பொலிஸார் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ததற்கு அமைய புதுக்குடியிருப்பு பொலிஸார் , கிளிநொச்சி குண்டு செயலிழக்கும் பிரிவினர், விசேட அதிரடிப்படையினர், தடயவியல் பொலிஸார் இணைந்து குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அத்துடன் குழி தோண்ட புதுக்குடியிருப்பு பிரதேசசபையின் ஜேசிபி இயந்திரமும் வரவழைக்கப்பட்டது.சம்பவ இடத்தினை முல்லைத்தீவு நீதவான் பார்வையிட்டதன் பின்னரே அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர் .
விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் - புதுக்குடியிருப்பில் அகழ்வுப் பணி புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு அகழ்வுப்பணி முன்னெடுப்பதற்கான நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட மந்துவில் பகுதியில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் தனியார் காணியொன்றில் பதுங்கு குழிக்குள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் குறித்த அகழ்வுப்பணிக்கான ஆயத்த பணி இடம்பெற்று வருகின்றது.புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர் ஹெரத் தலைமையிலான பொலிஸார் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ததற்கு அமைய புதுக்குடியிருப்பு பொலிஸார் , கிளிநொச்சி குண்டு செயலிழக்கும் பிரிவினர், விசேட அதிரடிப்படையினர், தடயவியல் பொலிஸார் இணைந்து குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டனர். அத்துடன் குழி தோண்ட புதுக்குடியிருப்பு பிரதேசசபையின் ஜேசிபி இயந்திரமும் வரவழைக்கப்பட்டது.சம்பவ இடத்தினை முல்லைத்தீவு நீதவான் பார்வையிட்டதன் பின்னரே அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர் .