• Jul 10 2025

இலங்கைக்கு 30% வரி விதிப்பு; டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

Chithra / Jul 10th 2025, 7:47 am
image


இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 30 சதவீதமாக நிர்ணயித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகை இலங்கைக்கு அனுப்பிய கடிதத்தில் புதிய வரி வீதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இந்த வரியானது எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்த வரி விதிப்பு, இலங்கையின் ஏற்றுமதித் துறையில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. 


முன்னதாக இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 12.2 வீத வரி விதித்திருந்த நிலையில், 

அமெரிக்க ஜனாதிபதியாக 2 ஆவது முறையாக டொனால்ட் டிரம்ப் தெரிவானதன் பின்னர் 44 வீதமாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்றையதினம் வரியை 30 வீதமாக நிர்ணயித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் கட்டணங்கள் தொடர்பாக மேலும் ஏழு நாடுகளுக்கு புதிய கடிதங்களை வெளியிடவுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்  அறிவித்தார்.  


இலங்கைக்கு 30% வரி விதிப்பு; டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 30 சதவீதமாக நிர்ணயித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.வெள்ளை மாளிகை இலங்கைக்கு அனுப்பிய கடிதத்தில் புதிய வரி வீதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வரியானது எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.இந்த வரி விதிப்பு, இலங்கையின் ஏற்றுமதித் துறையில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. முன்னதாக இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 12.2 வீத வரி விதித்திருந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதியாக 2 ஆவது முறையாக டொனால்ட் டிரம்ப் தெரிவானதன் பின்னர் 44 வீதமாக அறிவித்திருந்தார்.இந்நிலையில் நேற்றையதினம் வரியை 30 வீதமாக நிர்ணயித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் கட்டணங்கள் தொடர்பாக மேலும் ஏழு நாடுகளுக்கு புதிய கடிதங்களை வெளியிடவுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்  அறிவித்தார்.  

Advertisement

Advertisement

Advertisement