ஆளுங்கட்சி தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை சீனாவிலிருந்து சில அந்நிய சக்திகள் உளவு பார்ப்பதாக கனடா குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவின் நிதி அமைச்சர் பதவியை கிறிஸ்டியா பிரீலாண்ட் கடந்த டிசம்பரில் இராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து பிரதமர் பதவியையும், கட்சித் தலைவர் பதவியையும் ஜஸ்டின் ட்ரூடோ இராஜினாமா செய்தார். புதிய கட்சித் தலைவர் நியமிக்கப்படும் வரையிலும் அவர் பிரதமராக பதவி வகிப்பார் என அறிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து ஆளும் லிபரல் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பணிகள் நடக்கின்றன. இதன் முக்கிய வேட்பாளராக கிறிஸ்டியா பிரீலாண்ட் உள்ளார்.
இந்நிலையில், அவரது பிரசார குழு உறுப்பினர்களையும், கட்சியின் முக்கிய நிர்வாகிகளையும் குறிவைத்து சில அந்நிய சக்திகள் தீங்கிழைக்கும் செயலில் ஈடுபட்டிருப்பதாக கனடா அரசின் உலகளாவிய விவகாரங்களுக்கான உடனடி நடவடிக்கை அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
இதில், சீனாவைச் சேர்ந்த சீனா டிஜிட்டல் டைம்ஸ் என்கிற இணையதள செய்தி நிறுவனத்தின் நிபுணர்களும்,சீன அரசின் சமூக வலைதளமான வீசேட் கணக்குகளும் சம்மந்தப்பட்டிருப்பதாக கனடா கூறியுள்ளது.
இதற்கு கனடாவில் உள்ள சீன தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுபோன்ற உண்மைக்கு புறம்பான தகவல்களின் அடிப்படையில் சீனாவை தாக்கி அவதூறு பரப்புவது அபத்தமானது, அர்த்தமற்றது என தூதரக செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
கனடாவை உளவு பார்க்கும் சீனா ஆளுங்கட்சி தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை சீனாவிலிருந்து சில அந்நிய சக்திகள் உளவு பார்ப்பதாக கனடா குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கனடாவின் நிதி அமைச்சர் பதவியை கிறிஸ்டியா பிரீலாண்ட் கடந்த டிசம்பரில் இராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து பிரதமர் பதவியையும், கட்சித் தலைவர் பதவியையும் ஜஸ்டின் ட்ரூடோ இராஜினாமா செய்தார். புதிய கட்சித் தலைவர் நியமிக்கப்படும் வரையிலும் அவர் பிரதமராக பதவி வகிப்பார் என அறிவிக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து ஆளும் லிபரல் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பணிகள் நடக்கின்றன. இதன் முக்கிய வேட்பாளராக கிறிஸ்டியா பிரீலாண்ட் உள்ளார்.இந்நிலையில், அவரது பிரசார குழு உறுப்பினர்களையும், கட்சியின் முக்கிய நிர்வாகிகளையும் குறிவைத்து சில அந்நிய சக்திகள் தீங்கிழைக்கும் செயலில் ஈடுபட்டிருப்பதாக கனடா அரசின் உலகளாவிய விவகாரங்களுக்கான உடனடி நடவடிக்கை அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.இதில், சீனாவைச் சேர்ந்த சீனா டிஜிட்டல் டைம்ஸ் என்கிற இணையதள செய்தி நிறுவனத்தின் நிபுணர்களும்,சீன அரசின் சமூக வலைதளமான வீசேட் கணக்குகளும் சம்மந்தப்பட்டிருப்பதாக கனடா கூறியுள்ளது.இதற்கு கனடாவில் உள்ள சீன தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுபோன்ற உண்மைக்கு புறம்பான தகவல்களின் அடிப்படையில் சீனாவை தாக்கி அவதூறு பரப்புவது அபத்தமானது, அர்த்தமற்றது என தூதரக செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.