• May 09 2024

இலங்கைக்கான சீனாவின் கடன்கள் கட்டாயப்படுத்துவதற்கான கருவியாகப் பயன்படுத்தப்படக்கூடும் -அமெரிக்கா அச்சம்! SamugamMedia

Tamil nila / Feb 25th 2023, 10:55 pm
image

Advertisement

இந்தியாவின் மிகநெருங்கிய அயல்நாடுகளான இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு சீனாவினால் வழங்கப்பட்டுள்ள கடன்கள் அந்நாடுகளை ஏதேனும் விடயங்களில் கட்டாயப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படக்கூடுமென அமெரிக்கா அச்சம் வெளியிட்டுள்ளது.


சீனாவால் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் வழங்கப்பட்டுள்ள கடன்கள் கட்டாயப்படுத்துவதற்கான அந்நியச்செலவாணியாகப் பயன்படுத்தப்படக்கூடுமெனத் தாம் மிகத்தீவிர கரிசனை கொண்டிருப்பதாக அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவிச்செயலர் டொனால்ஸ் லூ தெரிவித்துள்ளார்.


அதுமாத்திரமன்றி நாடுகள் சுயமாகத் தீர்மானம் எடுப்பதற்கும், சீனா உள்ளடங்கலாக எந்தவொரு வெளியகத்தரப்பினரதும் அழுத்தங்களின் அடிப்படையில் தீர்மானம் மேற்கொள்ளாமல் இருப்பதற்கும் நாம் எவ்வாறு உதவமுடியும் என்பது குறித்து இந்தியாவுடனும், இப்பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துவருகின்றோம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


இலங்கைக்கான சீனாவின் கடன்கள் கட்டாயப்படுத்துவதற்கான கருவியாகப் பயன்படுத்தப்படக்கூடும் -அமெரிக்கா அச்சம் SamugamMedia இந்தியாவின் மிகநெருங்கிய அயல்நாடுகளான இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு சீனாவினால் வழங்கப்பட்டுள்ள கடன்கள் அந்நாடுகளை ஏதேனும் விடயங்களில் கட்டாயப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படக்கூடுமென அமெரிக்கா அச்சம் வெளியிட்டுள்ளது.சீனாவால் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் வழங்கப்பட்டுள்ள கடன்கள் கட்டாயப்படுத்துவதற்கான அந்நியச்செலவாணியாகப் பயன்படுத்தப்படக்கூடுமெனத் தாம் மிகத்தீவிர கரிசனை கொண்டிருப்பதாக அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவிச்செயலர் டொனால்ஸ் லூ தெரிவித்துள்ளார்.அதுமாத்திரமன்றி நாடுகள் சுயமாகத் தீர்மானம் எடுப்பதற்கும், சீனா உள்ளடங்கலாக எந்தவொரு வெளியகத்தரப்பினரதும் அழுத்தங்களின் அடிப்படையில் தீர்மானம் மேற்கொள்ளாமல் இருப்பதற்கும் நாம் எவ்வாறு உதவமுடியும் என்பது குறித்து இந்தியாவுடனும், இப்பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துவருகின்றோம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement