• Nov 14 2024

எல்லை மோதல்கள் குறித்து சீன தூதர், மியான்மர் ஜுண்டா தலைவர் சந்திப்பு!

Tamil nila / Aug 9th 2024, 10:39 pm
image

சீனா- மியன்மார் எல்லையில் அமைதி, நிலைத்தன்மை நீடிக்க இருநாட்டு தலைவர்களும் சந்தித்துப் பேசியுள்ளனர்.

சீனா சார்பில் சிறப்பு தூதர் டெங் சிஜுனும் மியன்மார் சார்பில் அந்நாட்டு ராணுவத் தலைவர் மின் அங் லெங்கும் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.

சில நாள்களுக்கு முன்பு இருநாடுகளுக்கு இடையிலான எல்லையில் பூசல் ஏற்பட்டது. வடக்குப் பகுதியில் இருக்கும் ‌‌‌ஷான் மாநிலத்தில் மியன்மாரின் உள்ளூர் கிளர்ச்சியாளர்கள் ராணுவ இடங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தினர். அங்கு அடிக்கடி தாக்குதல் நடக்கிறது.

தாக்குதல் நடந்த இடம் சீனாவுக்கும் மியன்மாருக்கும் இடையில் உள்ள வர்த்தகத்திற்கு மிகமுக்கியமான இடமாகும்.

மியன்மார் ராணுவத்திற்கு மிகவும் நெருக்கமாக உள்ள நாடு சீனா. மியன்மாருக்கு ஆயுதங்கள் வழங்குவதிலும் சீனா முன்னணி வகிக்கிறது.

மியன்மார் உள்ளூர் கிளர்ச்சியார்களிடமும் சீனா நெருக்கமாக உள்ளது. எல்லையில் உள்ள சில முக்கிய இடங்களை கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளதால் சீனா அவ்வாறு செய்வதாக கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

கடந்த வாரம் மியன்மார் உள்ளூர் கிளர்ச்சியாளர்கள் 150,000க்கும் அதிகமான மக்கள் வாழும் லாசியோ நகரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

எல்லை மோதல்கள் குறித்து சீன தூதர், மியான்மர் ஜுண்டா தலைவர் சந்திப்பு சீனா- மியன்மார் எல்லையில் அமைதி, நிலைத்தன்மை நீடிக்க இருநாட்டு தலைவர்களும் சந்தித்துப் பேசியுள்ளனர்.சீனா சார்பில் சிறப்பு தூதர் டெங் சிஜுனும் மியன்மார் சார்பில் அந்நாட்டு ராணுவத் தலைவர் மின் அங் லெங்கும் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.சில நாள்களுக்கு முன்பு இருநாடுகளுக்கு இடையிலான எல்லையில் பூசல் ஏற்பட்டது. வடக்குப் பகுதியில் இருக்கும் ‌‌‌ஷான் மாநிலத்தில் மியன்மாரின் உள்ளூர் கிளர்ச்சியாளர்கள் ராணுவ இடங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தினர். அங்கு அடிக்கடி தாக்குதல் நடக்கிறது.தாக்குதல் நடந்த இடம் சீனாவுக்கும் மியன்மாருக்கும் இடையில் உள்ள வர்த்தகத்திற்கு மிகமுக்கியமான இடமாகும்.மியன்மார் ராணுவத்திற்கு மிகவும் நெருக்கமாக உள்ள நாடு சீனா. மியன்மாருக்கு ஆயுதங்கள் வழங்குவதிலும் சீனா முன்னணி வகிக்கிறது.மியன்மார் உள்ளூர் கிளர்ச்சியார்களிடமும் சீனா நெருக்கமாக உள்ளது. எல்லையில் உள்ள சில முக்கிய இடங்களை கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளதால் சீனா அவ்வாறு செய்வதாக கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.கடந்த வாரம் மியன்மார் உள்ளூர் கிளர்ச்சியாளர்கள் 150,000க்கும் அதிகமான மக்கள் வாழும் லாசியோ நகரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement