• Nov 26 2024

சுழிபுரம் ஞான வைரவர் ஆலயத்தின் சங்காபிஷேக உற்சவம்- பக்தி பரவசத்தில் மெய்சிலிர்க்க வைத்த பெண்கள்!

Tamil nila / Jul 20th 2024, 10:00 am
image

யாழ்ப்பாணம் - சுழிபுரம், பெரியபுலோ அரசடி ஞான வைரவர் ஆலயத்தின் சங்காபிஷேக உற்சவம் நேற்றையதினம் (19) வெகு சிறப்பாக நடைபெற்றது.

காலை குமிழமுனை பெரியதம்பிரான் ஆலயத்தில் இருந்து பெண்களும், சிறுவர்களும் பாற்செம்பினை தலையில் தாங்கியவாறு, சுழிபுரம் ஞான வைரவர் ஆலயத்தை வந்தடைந்தனர். இந்த காட்சியானது அனைவரையும் பிரமிக்க வைத்தது.

பின்னர் வைரவப் பெருமானுக்கு பால், இளநீர் உள்ளிட்ட பல அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து 1008 சங்குகளால் வைரவப் பெருமானுக்கு சங்காபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

ஆலய கிரியைகளை சிவஸ்ரீ குகன் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடாத்தி வைத்தனர்.

பல பாகங்களிலும் இருந்து வருகை தந்த பக்தர்கள் வைரவப் பெருமானை தரிசித்து இஷ்ட சித்திகளை பெற்றுச் சென்றனர்.

சுழிபுரம் ஞான வைரவர் ஆலயத்தின் சங்காபிஷேக உற்சவம்- பக்தி பரவசத்தில் மெய்சிலிர்க்க வைத்த பெண்கள் யாழ்ப்பாணம் - சுழிபுரம், பெரியபுலோ அரசடி ஞான வைரவர் ஆலயத்தின் சங்காபிஷேக உற்சவம் நேற்றையதினம் (19) வெகு சிறப்பாக நடைபெற்றது.காலை குமிழமுனை பெரியதம்பிரான் ஆலயத்தில் இருந்து பெண்களும், சிறுவர்களும் பாற்செம்பினை தலையில் தாங்கியவாறு, சுழிபுரம் ஞான வைரவர் ஆலயத்தை வந்தடைந்தனர். இந்த காட்சியானது அனைவரையும் பிரமிக்க வைத்தது.பின்னர் வைரவப் பெருமானுக்கு பால், இளநீர் உள்ளிட்ட பல அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து 1008 சங்குகளால் வைரவப் பெருமானுக்கு சங்காபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.ஆலய கிரியைகளை சிவஸ்ரீ குகன் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடாத்தி வைத்தனர்.பல பாகங்களிலும் இருந்து வருகை தந்த பக்தர்கள் வைரவப் பெருமானை தரிசித்து இஷ்ட சித்திகளை பெற்றுச் சென்றனர்.

Advertisement

Advertisement

Advertisement