• Sep 14 2026

வீடொன்றை சுற்றிவளைத்த CID - சிக்கிய பயங்கர ஆயுதங்கள்! சந்தேகநபர் கைது

Chithra / Sep 13th 2026, 11:37 am
image


வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 12 ரக துப்பாக்கி, கைக்குண்டு மற்றும் BMG வகையைச் சேர்ந்த 6 தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று (12) கந்தானேகெதர, வலகும்புரமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.


இதன்போது குறித்த வீட்டிலிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 12 ரக துப்பாக்கி, கைக்குண்டு மற்றும் BMG வகையைச் சேர்ந்த 6 தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.


இதனையடுத்து, வலகும்புரமுல்ல, குளியாப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து மீட்கப்பட்ட ஆயுதங்கள் எவ்வாறு அவரிடம் கிடைத்தன என்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வீடொன்றை சுற்றிவளைத்த CID - சிக்கிய பயங்கர ஆயுதங்கள் சந்தேகநபர் கைது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 12 ரக துப்பாக்கி, கைக்குண்டு மற்றும் BMG வகையைச் சேர்ந்த 6 தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று (12) கந்தானேகெதர, வலகும்புரமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.இதன்போது குறித்த வீட்டிலிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 12 ரக துப்பாக்கி, கைக்குண்டு மற்றும் BMG வகையைச் சேர்ந்த 6 தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.இதனையடுத்து, வலகும்புரமுல்ல, குளியாப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து மீட்கப்பட்ட ஆயுதங்கள் எவ்வாறு அவரிடம் கிடைத்தன என்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement