• Nov 19 2024

அரச ஊழியர்கள் எமது நாட்டின், சமூகத்தின் முதுகெலும்புகள் - றிஸ்லி முஸ்தபா

Tharmini / Oct 30th 2024, 8:54 am
image

நாட்டின் பொருளாதார நெருக்கடியின் பின்னர் அரச ஊழியர்கள் மற்றும் நாட்டு மக்கள் எதிர்கொண்டு வரும் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுக்கக்கூடிய ஒரு பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவதே எனது முதற்பணியாக நான் கருதுகின்றேன்.

என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட பொதுத்தேர்தல் வேட்பாளர் றிஸ்லி முஸ்தபா தெரிவித்தார். தனது கல்முனை அலுவலகத்தில் நேற்று (29) இடம்பெற்ற அரசதுறை உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

றிஸ்லி முஸ்தபா தொடர்ந்தும் அங்கு உரையாற்றும்போது, அம்பாறை மாவட்டத்திலுள்ள சகல அரச ஊழியர்களும் பொருளாதார நெருக்கடி காரணமாக பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருவதை நான் அறிவேன். 

அவர்களுக்கான சிறந்த எதிர்காலத்தையும் பொருளாதார முன்னேற்றத்தையும் வழங்குவதற்கு நான் கடந்த காலங்களிலும் முயற்சிகள் மேற்கொண்டு உள்ளேன். எதிர்காலத்திலும் எனது கைகள் பலப்படுத்தப்படுகின்ற போது அதைவிட முன்னோக்கி  சென்று அவர்களின்  பிரச்சினைகளை தீர்த்து உதவிட என்னால் முடியும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

எமது அம்பாறை மாவட்டத்தில் உள்ள அரச ஊழியர்கள் இந்த முறை எனக்கு ஒரு சந்தர்ப்பத்தை தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன், நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றம் என்னில் இருந்து ஆரம்பிக்கட்டும்.

உண்மையில் அரச ஊழியர்கள் எமது நாட்டின், சமூகத்தின் முதுகெலும்புகள். நீங்கள் என்னை தெரிவு செய்து பாராளுமன்றம் அனுப்புவதன் மூலமாக இந்த பிராந்திய அரச கட்டமைப்பு நிச்சயமாக மாற்றத்தை நோக்கி நகரும் என்று நம்புகிறேன்.

எனது தந்தை முன்னாள் பிரதி அமைச்சர் மர்ஹூம் மயோன் முஸ்தபா அவர்களது பல கனவு செயற்திட்டங்கள் என் கைவசம் உள்ளது. அதை இன்ஷா அல்லாஹ் நிச்சயமாக முன்னெடுப்பேன்.

எனது சொந்த நிதி மூலமாக முடியுமான அளவு எமது பிராந்திய பாடசாலைகளுக்கும், மாணவர்களுக்கும் உதவி உள்ளேன். அதை இடைவிடாது முன்கொண்டு செல்லவும், எமது பிராந்தியத்தில் கை நழுவிப்போன அரச காரியாலயங்களை மீண்டும் கொண்டு வரவும் என்னால் முடியும் என்று நம்புகிறேன்.

அனைத்து மாவட்ட செயலகங்கள், அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலகங்கள், பொலிஸ் நிலையங்கள் மற்றும் பொலிஸ் அலுவலகங்களில் ஒக்டோபர் 30 முதல் நவம்பர் 4 வரை, ஏனைய அரச அலுவலகங்கள் மற்றும் இராணுவ முகாம்களில் நவம்பர் 01 முதல் நவம்பர் 04 வரை இவ் அஞ்சல் மூல வாக்களிப்பு இடம்பெற உள்ள நிலையில் உங்களது வாக்குகளில் ஒரு விருப்பு வாக்கினை எனக்கும் அளிப்பதன் மூலம் நிச்சயமாக உங்களது குரலாக பாராளுமன்றத்தில் ஒலிப்பேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அரச ஊழியர்கள் எமது நாட்டின், சமூகத்தின் முதுகெலும்புகள் - றிஸ்லி முஸ்தபா நாட்டின் பொருளாதார நெருக்கடியின் பின்னர் அரச ஊழியர்கள் மற்றும் நாட்டு மக்கள் எதிர்கொண்டு வரும் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுக்கக்கூடிய ஒரு பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவதே எனது முதற்பணியாக நான் கருதுகின்றேன்.என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட பொதுத்தேர்தல் வேட்பாளர் றிஸ்லி முஸ்தபா தெரிவித்தார். தனது கல்முனை அலுவலகத்தில் நேற்று (29) இடம்பெற்ற அரசதுறை உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.றிஸ்லி முஸ்தபா தொடர்ந்தும் அங்கு உரையாற்றும்போது, அம்பாறை மாவட்டத்திலுள்ள சகல அரச ஊழியர்களும் பொருளாதார நெருக்கடி காரணமாக பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருவதை நான் அறிவேன். அவர்களுக்கான சிறந்த எதிர்காலத்தையும் பொருளாதார முன்னேற்றத்தையும் வழங்குவதற்கு நான் கடந்த காலங்களிலும் முயற்சிகள் மேற்கொண்டு உள்ளேன். எதிர்காலத்திலும் எனது கைகள் பலப்படுத்தப்படுகின்ற போது அதைவிட முன்னோக்கி  சென்று அவர்களின்  பிரச்சினைகளை தீர்த்து உதவிட என்னால் முடியும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.எமது அம்பாறை மாவட்டத்தில் உள்ள அரச ஊழியர்கள் இந்த முறை எனக்கு ஒரு சந்தர்ப்பத்தை தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன், நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றம் என்னில் இருந்து ஆரம்பிக்கட்டும்.உண்மையில் அரச ஊழியர்கள் எமது நாட்டின், சமூகத்தின் முதுகெலும்புகள். நீங்கள் என்னை தெரிவு செய்து பாராளுமன்றம் அனுப்புவதன் மூலமாக இந்த பிராந்திய அரச கட்டமைப்பு நிச்சயமாக மாற்றத்தை நோக்கி நகரும் என்று நம்புகிறேன்.எனது தந்தை முன்னாள் பிரதி அமைச்சர் மர்ஹூம் மயோன் முஸ்தபா அவர்களது பல கனவு செயற்திட்டங்கள் என் கைவசம் உள்ளது. அதை இன்ஷா அல்லாஹ் நிச்சயமாக முன்னெடுப்பேன்.எனது சொந்த நிதி மூலமாக முடியுமான அளவு எமது பிராந்திய பாடசாலைகளுக்கும், மாணவர்களுக்கும் உதவி உள்ளேன். அதை இடைவிடாது முன்கொண்டு செல்லவும், எமது பிராந்தியத்தில் கை நழுவிப்போன அரச காரியாலயங்களை மீண்டும் கொண்டு வரவும் என்னால் முடியும் என்று நம்புகிறேன்.அனைத்து மாவட்ட செயலகங்கள், அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலகங்கள், பொலிஸ் நிலையங்கள் மற்றும் பொலிஸ் அலுவலகங்களில் ஒக்டோபர் 30 முதல் நவம்பர் 4 வரை, ஏனைய அரச அலுவலகங்கள் மற்றும் இராணுவ முகாம்களில் நவம்பர் 01 முதல் நவம்பர் 04 வரை இவ் அஞ்சல் மூல வாக்களிப்பு இடம்பெற உள்ள நிலையில் உங்களது வாக்குகளில் ஒரு விருப்பு வாக்கினை எனக்கும் அளிப்பதன் மூலம் நிச்சயமாக உங்களது குரலாக பாராளுமன்றத்தில் ஒலிப்பேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement