தேசிய சமாதான பேரவையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் மத சகவாழ்விற்கான முன்னெடுப்பு செயற்திட்டத்தின் கீழ் பிரதேச சர்வ சமயக் குழுக்களுக்கள் மற்றும் அரச உத்தியோகஸ்தர்களுக்கு மத ரீதியான வன்முறைகளை தடுப்பதற்கான தெளிவூட்டும் செயலமர்வு மன்னாரில் தனியார் விருந்தினர் விடுதியில் இன்றையதினம்(30) இடம்பெற்றது.
தொடர்பாடலுக்கான பயிற்சி மையத்தின் ஒழுங்கமைப்பில் அதன் மாவட்ட இணைப்பாளர் ஜசோதரன் தலைமையில் மாவட்ட ரீதியாக இயங்கி வரும் சர்வ சமய குழுவினர் மற்றும் அரச உத்தியோகஸ்தர்களின் பங்குபற்றுதலுடன் தேசிய சமாதான பேரவையினால் ஒழுங்கமைக்கப்பட்டு நிகழ்வு இடம் பெற்றது.
சமய சகவாழ்வு உட்பட மன்னார் மாவட்டத்தில் மத ரீதியாக காணப்படும் பிரச்சினை தொடர்பில் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்,தேர்தல் காலங்களில் மேற்கொள்ளப்படும் மத ரீதியான வெறுப்பு பேச்சை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் குறித்த செயலமர்வில் தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டது.
இவ் செயலமர்வில் மதகுருமார்கள், ஊடகவியளாலர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரச உத்தியோகஸ்தர்கள்,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
தேசிய சமாதான பேரவையின் ஏற்பாட்டில் மத சகவாழ்வு தொடர்பில் மன்னாரில் தெளிவூட்டும் செயலமர்வு. தேசிய சமாதான பேரவையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் மத சகவாழ்விற்கான முன்னெடுப்பு செயற்திட்டத்தின் கீழ் பிரதேச சர்வ சமயக் குழுக்களுக்கள் மற்றும் அரச உத்தியோகஸ்தர்களுக்கு மத ரீதியான வன்முறைகளை தடுப்பதற்கான தெளிவூட்டும் செயலமர்வு மன்னாரில் தனியார் விருந்தினர் விடுதியில் இன்றையதினம்(30) இடம்பெற்றது. தொடர்பாடலுக்கான பயிற்சி மையத்தின் ஒழுங்கமைப்பில் அதன் மாவட்ட இணைப்பாளர் ஜசோதரன் தலைமையில் மாவட்ட ரீதியாக இயங்கி வரும் சர்வ சமய குழுவினர் மற்றும் அரச உத்தியோகஸ்தர்களின் பங்குபற்றுதலுடன் தேசிய சமாதான பேரவையினால் ஒழுங்கமைக்கப்பட்டு நிகழ்வு இடம் பெற்றது.சமய சகவாழ்வு உட்பட மன்னார் மாவட்டத்தில் மத ரீதியாக காணப்படும் பிரச்சினை தொடர்பில் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்,தேர்தல் காலங்களில் மேற்கொள்ளப்படும் மத ரீதியான வெறுப்பு பேச்சை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் குறித்த செயலமர்வில் தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டது.இவ் செயலமர்வில் மதகுருமார்கள், ஊடகவியளாலர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரச உத்தியோகஸ்தர்கள்,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.