அம்பாறை - சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியான நாய்குட்டியார் சந்தி பகுதியில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த தேசிய காங்கிரஸின் வீரமுனை வட்டார வேட்பாளர் ஏ.சி.எம்.சஹீலை சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்த தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் பார்வையிட்டார்.
நேற்று இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் வருகை தந்து சென்ற பின்னர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் உட்பட ஆதரவாளர்களால் வீரமுனை வட்டார வேட்பாளர் ஏ.சி.எம்.சஹீல் உட்பட அவரது ஆதரவாளர்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தற்போது சூடுபிடித்துள்ள இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரச்சார கூட்டத்தில் மோதல்; தாக்குதலுக்குள்ளான வேட்பாளரை பார்வையிட்ட அதாஉல்லாஹ் அம்பாறை - சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியான நாய்குட்டியார் சந்தி பகுதியில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த தேசிய காங்கிரஸின் வீரமுனை வட்டார வேட்பாளர் ஏ.சி.எம்.சஹீலை சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்த தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் பார்வையிட்டார்.நேற்று இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் வருகை தந்து சென்ற பின்னர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் உட்பட ஆதரவாளர்களால் வீரமுனை வட்டார வேட்பாளர் ஏ.சி.எம்.சஹீல் உட்பட அவரது ஆதரவாளர்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது. நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தற்போது சூடுபிடித்துள்ள இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.