• May 18 2025

யாழில் இரு குழுக்களுக்கிடையே கைகலப்பு; முன்னாள் வேட்பாளருக்கு பலத்த காயம்

Chithra / May 18th 2025, 1:24 pm
image


வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கில் நேற்று (17) இரவு இரு குழுக்களுக்கிடையே கைகலப்பு சம்பவம் இடம்பெற்றதில் முன்னாள் உள்ளூராட்சி சபை தேர்தல் வேட்பாளர் ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று புனித பிலிப்நேரியார் ஆலய திருவிழாவுக்கான கொடியேற்ற நிகழ்வு நேற்று (17) இடம்பெற்றது 

கொடியேற்ற நிகழ்வின் பின் நள்ளிரவு ஆலய வெளிப்புற வளாகத்தில் நின்றவர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் திடீர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதால் இரு பகுதியினருக்கும் இடையில் கை கலப்பு இடம்பெற்றது.

கை கலப்பில் பலத்த காயமடைந்த பருத்தித்துறை பிரதேச சபைக்கான தேர்தலில் நாகர்கோவில் வட்டாரத்தில் போட்டியிட்ட வேட்பாளர் பலத்த காயங்களுடன் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் மருதங்கேணி பொலிசாரால் கைது செய்யப்பட்டதுடன் காயங்களுக்குள்ளான முன்னாள் வேட்பாளர் அதிக மதுபானம் அருந்தியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் இடம்பெற்ற ஆலய வெளிப்புற சூழலில் அதிக மதுபான போத்தல்கள் உடைந்த நிலையில் காணப்படுகின்றன.

சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

யாழில் இரு குழுக்களுக்கிடையே கைகலப்பு; முன்னாள் வேட்பாளருக்கு பலத்த காயம் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கில் நேற்று (17) இரவு இரு குழுக்களுக்கிடையே கைகலப்பு சம்பவம் இடம்பெற்றதில் முன்னாள் உள்ளூராட்சி சபை தேர்தல் வேட்பாளர் ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று புனித பிலிப்நேரியார் ஆலய திருவிழாவுக்கான கொடியேற்ற நிகழ்வு நேற்று (17) இடம்பெற்றது கொடியேற்ற நிகழ்வின் பின் நள்ளிரவு ஆலய வெளிப்புற வளாகத்தில் நின்றவர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் திடீர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதால் இரு பகுதியினருக்கும் இடையில் கை கலப்பு இடம்பெற்றது.கை கலப்பில் பலத்த காயமடைந்த பருத்தித்துறை பிரதேச சபைக்கான தேர்தலில் நாகர்கோவில் வட்டாரத்தில் போட்டியிட்ட வேட்பாளர் பலத்த காயங்களுடன் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் மருதங்கேணி பொலிசாரால் கைது செய்யப்பட்டதுடன் காயங்களுக்குள்ளான முன்னாள் வேட்பாளர் அதிக மதுபானம் அருந்தியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.சம்பவம் இடம்பெற்ற ஆலய வெளிப்புற சூழலில் அதிக மதுபான போத்தல்கள் உடைந்த நிலையில் காணப்படுகின்றன.சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement