அமெரிக்காவில் கிறிஸ்மஸ் பரிசுகள் தொடர்பான பிரச்சினையால் தனது சகோதரியை சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டில் இரு பதின்ம வயது சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனது 10 மாத குழந்தையுடன் இருந்த 23 வயது சகோதரியை 14 வயதான சகோதரர் நெஞ்சில் சுட்டுக் கொன்றிருப்பதாக புளோரிடா மாநில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தொடர்ந்து அந்த சகோதரரை 15 வயதான மூத்த சகோதரர் வயிற்றில் சுட்டுள்ளார்.
கிறிஸ்மஸ் பண்டிகையில் யாருக்கு அதிக பரிசுப் பொருள் கிடைத்திருக்கிறது என்ற விவாதத்தால் ஏற்பட்ட மோதலை அடுத்தே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 14 வயது சகோதரர் சிகிச்சை முடிந்து விடுவிக்கப்பட்ட பின்னர் தடுப்புக்காவலில் வைக்கப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில் கைது செய்யப்பட்டிருக்கும் 15 வயது சகோதரர் மீது கொலை முயற்சியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கிறிஸ்மஸ் பரிசால் ஏற்பட்ட மோதல் - அக்காவை சுட்டு கொலை செய்த சகோதரர்கள்.samugammedia அமெரிக்காவில் கிறிஸ்மஸ் பரிசுகள் தொடர்பான பிரச்சினையால் தனது சகோதரியை சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டில் இரு பதின்ம வயது சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.தனது 10 மாத குழந்தையுடன் இருந்த 23 வயது சகோதரியை 14 வயதான சகோதரர் நெஞ்சில் சுட்டுக் கொன்றிருப்பதாக புளோரிடா மாநில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தொடர்ந்து அந்த சகோதரரை 15 வயதான மூத்த சகோதரர் வயிற்றில் சுட்டுள்ளார்.கிறிஸ்மஸ் பண்டிகையில் யாருக்கு அதிக பரிசுப் பொருள் கிடைத்திருக்கிறது என்ற விவாதத்தால் ஏற்பட்ட மோதலை அடுத்தே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.இதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 14 வயது சகோதரர் சிகிச்சை முடிந்து விடுவிக்கப்பட்ட பின்னர் தடுப்புக்காவலில் வைக்கப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில் கைது செய்யப்பட்டிருக்கும் 15 வயது சகோதரர் மீது கொலை முயற்சியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.