ஸ்ரீ தலதா வழிபாட்டுடன் இணைந்த வகையில் 'கிளீன் ஸ்ரீலங்கா' வேலைத்திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகளில் ஒன்றான கழிவுகளை முறையாக அகற்றும் செயற்பாடு, 09 ஆவது நாளாக நேற்று நடைபெற்றது.
தலதா வழிபாட்டுக்கு பிரவேசிக்கும் மூன்று வீதிகளும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் நேற்று நாள் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டன.
இவ்வேலைத்திட்டத்திற்கு "கிளீன் ஸ்ரீலங்கா" செயலக அதிகாரிகள், இளைஞர்கள் மற்றும் பல தன்னார்வக் குழுக்களும் தமது பங்களிப்பை வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கழிவுகளை முறையாக அகற்றுவதற்கான மனப்பான்மையை மக்களிடையே ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த செயற்திட்டத்தை, வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு பொதுமக்களின் ஆதரவும் கிடைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீ தலதா வழிபாட்டுடன் இணைந்த கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் ஸ்ரீ தலதா வழிபாட்டுடன் இணைந்த வகையில் 'கிளீன் ஸ்ரீலங்கா' வேலைத்திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகளில் ஒன்றான கழிவுகளை முறையாக அகற்றும் செயற்பாடு, 09 ஆவது நாளாக நேற்று நடைபெற்றது. தலதா வழிபாட்டுக்கு பிரவேசிக்கும் மூன்று வீதிகளும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் நேற்று நாள் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டன. இவ்வேலைத்திட்டத்திற்கு "கிளீன் ஸ்ரீலங்கா" செயலக அதிகாரிகள், இளைஞர்கள் மற்றும் பல தன்னார்வக் குழுக்களும் தமது பங்களிப்பை வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கழிவுகளை முறையாக அகற்றுவதற்கான மனப்பான்மையை மக்களிடையே ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த செயற்திட்டத்தை, வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு பொதுமக்களின் ஆதரவும் கிடைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.