• Mar 10 2025

தேசிய மக்கள் சக்தியின் சோஷலிச இளைஞர் அமைப்பின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்

Chithra / Mar 9th 2025, 3:42 pm
image


திருகோணமலை மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் சோஷலிச இளைஞர் அணியால் ஏற்பாடு செய்யப்பட்ட கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் திருகோணமலை கருமலையூற்று கடற்கரையில்  இன்று (9) இடம்பெற்றது.

தேசிய மக்கள் சக்தியினால் இளைஞர் தினமாக  பிரகடனப்படுத்தப்பட்ட  இன்றைய நாளில், இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

திருகோணமலை மாவட்ட  தேசிய மக்கள் சக்தியின் சோசலிச இளைஞரணி தலைவர் W. P. நிரோஷன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வு இடம்பெற்றது.

திருகோணமலை மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும், நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் கலந்து கொண்டு,  கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்கு தங்களுடைய பங்களிப்பினை வழங்கியிருந்தனர். 

திருகோணமலை மாவட்ட தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ரோசான் அக்மீன, வெளி  விவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவின்  பிரத்தியேகச் செயலாளர் அஷ்ரப் இம்ரான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


தேசிய மக்கள் சக்தியின் சோஷலிச இளைஞர் அமைப்பின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் திருகோணமலை மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் சோஷலிச இளைஞர் அணியால் ஏற்பாடு செய்யப்பட்ட கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் திருகோணமலை கருமலையூற்று கடற்கரையில்  இன்று (9) இடம்பெற்றது.தேசிய மக்கள் சக்தியினால் இளைஞர் தினமாக  பிரகடனப்படுத்தப்பட்ட  இன்றைய நாளில், இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.திருகோணமலை மாவட்ட  தேசிய மக்கள் சக்தியின் சோசலிச இளைஞரணி தலைவர் W. P. நிரோஷன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வு இடம்பெற்றது.திருகோணமலை மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும், நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் கலந்து கொண்டு,  கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்கு தங்களுடைய பங்களிப்பினை வழங்கியிருந்தனர். திருகோணமலை மாவட்ட தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ரோசான் அக்மீன, வெளி  விவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவின்  பிரத்தியேகச் செயலாளர் அஷ்ரப் இம்ரான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement