• Mar 10 2025

தேசபந்து கைது செய்யப்படாமைக்கு அநுர - டிரான் ஒப்பந்தமே காரணம்! சம்பிக்க பகிரங்கம்

Chithra / Mar 9th 2025, 3:46 pm
image

  

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் முன்னாள் அமைச்சர் டிரான் அலஸுக்கும் இடையிலான ஒப்பந்தமே, முன்னாள் ஐஜிபி தேசபந்து தென்னகோனை கைது செய்வதைத் தடுத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டியுள்ளார்.

ஹோமகமவில் நடந்த  கூட்டத்தில் கருத்துரைத்த அவர், 

டிரான் அலஸ் என்ன மோசடி செய்தாலும் அல்லது கொலை செய்தாலும் அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் ஜனாதிபதி அநுரகுமார எடுக்க மாட்டார்.

அத்துடன், தேசபந்து கைது செய்யப்படாமைக்கு பின்னால் டிரான் அலஸ் இருக்கிறார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

அநுரவுக்கும், டிரான் அலஸுக்கும் இடையில் உள்ள ஒப்பந்தப்படி, அலஸ் மோசடி செய்தாலோ, ஒருவேளை ஈ விசா அல்லது ஈ-கடவுச்சீட்டு அல்லது அவர் எந்தவொரு கொலை செய்தாலும், அவருக்கு எதிராக அநுரகுமார எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார் என்றும்  சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இந்த ஒப்பந்தம் குறித்த விபரங்களை் எதனையும் சம்பிக்க ரணவக்க வெளியிடவில்லை. 

தேசபந்து கைது செய்யப்படாமைக்கு அநுர - டிரான் ஒப்பந்தமே காரணம் சம்பிக்க பகிரங்கம்   ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் முன்னாள் அமைச்சர் டிரான் அலஸுக்கும் இடையிலான ஒப்பந்தமே, முன்னாள் ஐஜிபி தேசபந்து தென்னகோனை கைது செய்வதைத் தடுத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டியுள்ளார்.ஹோமகமவில் நடந்த  கூட்டத்தில் கருத்துரைத்த அவர், டிரான் அலஸ் என்ன மோசடி செய்தாலும் அல்லது கொலை செய்தாலும் அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் ஜனாதிபதி அநுரகுமார எடுக்க மாட்டார்.அத்துடன், தேசபந்து கைது செய்யப்படாமைக்கு பின்னால் டிரான் அலஸ் இருக்கிறார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அநுரவுக்கும், டிரான் அலஸுக்கும் இடையில் உள்ள ஒப்பந்தப்படி, அலஸ் மோசடி செய்தாலோ, ஒருவேளை ஈ விசா அல்லது ஈ-கடவுச்சீட்டு அல்லது அவர் எந்தவொரு கொலை செய்தாலும், அவருக்கு எதிராக அநுரகுமார எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார் என்றும்  சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.அதேவேளை, இந்த ஒப்பந்தம் குறித்த விபரங்களை் எதனையும் சம்பிக்க ரணவக்க வெளியிடவில்லை. 

Advertisement

Advertisement

Advertisement