• Apr 29 2025

'சிறி தலதா வழிபாட்டுடன் இணைந்த கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் - பத்துநாள் நிறைவில் கண்டி குளத்தை சுத்தப்படுத்தும் பணி

Thansita / Apr 28th 2025, 6:05 pm
image

 "சிறி தலதா வழிபாடு" பத்துநாள் நிறைவில் கண்டி குளத்தை சுத்தப்படுத்தும் பணியை கிளீன் ஸ்ரீலங்கா செயலகம் மற்றும் கடற்படை என்பன இணைந்து முன்னெடுத்துள்ளன. 

கண்டி குளத்தில் போடப்பட்டிருந்த பிலாஸ்டிக் போத்தல்கள் மற்றும் பொலித்தீன் பைகள் உள்ளிட்ட கழிவுகளை சுத்தப்படுத்தி கண்டி குளம் வழமை நிலைக்கு கொண்டுவரப்பட்டது.

கடற்படை கொமாண்டர் வீரசேகர மற்றும் கெப்டன் சரித குணவத்த உள்ளிட்ட அதிகாரிகளின் தலைமையிலான குழு மற்றும் கிளீன் ஸ்ரீலங்கா, நீர்ப்பாசன மற்றும் தொல்லியல் திணைக்களத்துடன் இணைந்து முன்னெடுக்கும் இந்த பணிக்கு தன்னார்வ குழுக்கள் மற்றும் பொதுமக்களின ஆதரவும் குறைவின்றி கிடைத்தது. 

கண்டி நகருக்கு வரும் உள்நாட்டு வௌிநாட்டு சுற்றுலாப்பயணிகளை கண்டி குளம் பெரிதும் கவர்ந்திருப்பதோடு, பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் குளத்தில் கிடப்பதால் நீர் மூலங்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும்.

நாட்டிற்குள் சுற்றாடல் மற்றும் சமூக மற்றும் மனப்பான்மை ரீதியான மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதன் ஊடாக சமூகத்தை மிக உயர்வான நிலைக்கு உயர்த்தி வைக்கும் நோக்கில்  கீழ் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் சுற்றாடல் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்படுவதோடு, கழிவுகள் அற்ற சுற்றாடலை பேணவும் மக்கள் மத்தியில் மனப்பான்மையை மேம்படுத்துவதற்கான பல வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன.

அதன்படி "சிறி தலதா வழிபாடு" உடன் இணைந்ததாக நாடளாவிய ரீதியில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் கண்டி நகரத்தை அண்மித்து 10 நாட்களாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டது. 


'சிறி தலதா வழிபாட்டுடன் இணைந்த கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் - பத்துநாள் நிறைவில் கண்டி குளத்தை சுத்தப்படுத்தும் பணி  "சிறி தலதா வழிபாடு" பத்துநாள் நிறைவில் கண்டி குளத்தை சுத்தப்படுத்தும் பணியை கிளீன் ஸ்ரீலங்கா செயலகம் மற்றும் கடற்படை என்பன இணைந்து முன்னெடுத்துள்ளன. கண்டி குளத்தில் போடப்பட்டிருந்த பிலாஸ்டிக் போத்தல்கள் மற்றும் பொலித்தீன் பைகள் உள்ளிட்ட கழிவுகளை சுத்தப்படுத்தி கண்டி குளம் வழமை நிலைக்கு கொண்டுவரப்பட்டது.கடற்படை கொமாண்டர் வீரசேகர மற்றும் கெப்டன் சரித குணவத்த உள்ளிட்ட அதிகாரிகளின் தலைமையிலான குழு மற்றும் கிளீன் ஸ்ரீலங்கா, நீர்ப்பாசன மற்றும் தொல்லியல் திணைக்களத்துடன் இணைந்து முன்னெடுக்கும் இந்த பணிக்கு தன்னார்வ குழுக்கள் மற்றும் பொதுமக்களின ஆதரவும் குறைவின்றி கிடைத்தது. கண்டி நகருக்கு வரும் உள்நாட்டு வௌிநாட்டு சுற்றுலாப்பயணிகளை கண்டி குளம் பெரிதும் கவர்ந்திருப்பதோடு, பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் குளத்தில் கிடப்பதால் நீர் மூலங்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும்.நாட்டிற்குள் சுற்றாடல் மற்றும் சமூக மற்றும் மனப்பான்மை ரீதியான மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதன் ஊடாக சமூகத்தை மிக உயர்வான நிலைக்கு உயர்த்தி வைக்கும் நோக்கில்  கீழ் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் சுற்றாடல் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்படுவதோடு, கழிவுகள் அற்ற சுற்றாடலை பேணவும் மக்கள் மத்தியில் மனப்பான்மையை மேம்படுத்துவதற்கான பல வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன.அதன்படி "சிறி தலதா வழிபாடு" உடன் இணைந்ததாக நாடளாவிய ரீதியில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் கண்டி நகரத்தை அண்மித்து 10 நாட்களாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டது. 

Advertisement

Advertisement

Advertisement