• Jan 10 2025

பெரும் மோசடிகளை மறைக்கும் க்ளீன் ஸ்ரீ லங்கா திட்டம்! ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு

Chithra / Jan 9th 2025, 9:24 am
image

 

க்ளீன் ஸ்ரீ லங்கா திட்டம் என்று குறிப்பிட்டுக் பெரும் மோசடிகளும், குற்றங்களும் மறைக்கப்படுகிறது எனவும்,  முறைமை மாற்றத்தில் மக்கள் இதனை எதிர்பார்க்கவில்லை என்றும்  ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழான கட்டளைகள், மீதான விவாதம் தொடர்பில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இடம்பெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத்தேர்தலிலும் முறைமை மாற்றம் பிரதான பேசுபொருளாக காணப்பட்டது.

அனைத்து அரசியல் கட்சிகளும் முறைமை மாற்றம் பற்றி பேசின. சிறந்த மாற்றத்தை தேசிய மக்கள் சக்திளால் ஏற்படுத்த முடியும் என்று நம்பிக்கை கொண்டு மக்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்தார்கள்.

வாழ்க்கைச் செலவு குறைப்பு, நாணய நிதியத்துடனான செயற்திட்ட மறுசீரமைப்பு, ஊழல் மோசடி, சிறந்த அரச நிர்வாகம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.

அநுரகுமார திசாநாயக்க ஆட்சிக்கு வந்த 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளதா என்பதை ஆராய வேண்டும்.

2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் 100 நாள் வேலைத்திட்டத்தை மக்கள் மத்தியில் முன்னெடுத்தது.

எரிபொருள், பருப்பு, அரிசி, உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் பகுதியளவில் குறைக்கப்பட்டன.மேலும், மக்களின் வாழ்க்கைச் செலவுகளும் குறைக்கப்பட்டன.

அநுரகுமாரவின் 100 நாள் நிர்வாகத்தில் அரிசி, தேங்காய், ஆகிய உணவு பொருட்களின் விலைகள் அமெரிக்க டொலருக்கு நிகரானதாக காணப்படுகிறது.

எதிர்க்கட்சி பதவிக்கான பொறுப்பை நாங்கள் சிறந்த முறையில் நிறைவேற்றியுள்ளோம்.

கோட்டபய ராசபக்சவின் அரசாங்கத்தில் பிரதான எதிர்க்கட்சியாக செயற்படும் போது நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து பல முறை எடுத்துரைத்தோம்.

வங்குரோத்து நிலைமையை தடுக்க சர்வதேச நாணய நிதியத்தை நாடுமாறு வலியுறுத்தினோம் .இருப்பினும் அரசாங்கம் எமது கருத்துக்கு மதிப்பளிக்கவில்லை. இறுதியில் நாடு வங்குரோத்து நிலையடைந்தது” என்றார்.

பெரும் மோசடிகளை மறைக்கும் க்ளீன் ஸ்ரீ லங்கா திட்டம் ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு  க்ளீன் ஸ்ரீ லங்கா திட்டம் என்று குறிப்பிட்டுக் பெரும் மோசடிகளும், குற்றங்களும் மறைக்கப்படுகிறது எனவும்,  முறைமை மாற்றத்தில் மக்கள் இதனை எதிர்பார்க்கவில்லை என்றும்  ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழான கட்டளைகள், மீதான விவாதம் தொடர்பில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,இடம்பெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத்தேர்தலிலும் முறைமை மாற்றம் பிரதான பேசுபொருளாக காணப்பட்டது.அனைத்து அரசியல் கட்சிகளும் முறைமை மாற்றம் பற்றி பேசின. சிறந்த மாற்றத்தை தேசிய மக்கள் சக்திளால் ஏற்படுத்த முடியும் என்று நம்பிக்கை கொண்டு மக்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்தார்கள்.வாழ்க்கைச் செலவு குறைப்பு, நாணய நிதியத்துடனான செயற்திட்ட மறுசீரமைப்பு, ஊழல் மோசடி, சிறந்த அரச நிர்வாகம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.அநுரகுமார திசாநாயக்க ஆட்சிக்கு வந்த 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளதா என்பதை ஆராய வேண்டும்.2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் 100 நாள் வேலைத்திட்டத்தை மக்கள் மத்தியில் முன்னெடுத்தது.எரிபொருள், பருப்பு, அரிசி, உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் பகுதியளவில் குறைக்கப்பட்டன.மேலும், மக்களின் வாழ்க்கைச் செலவுகளும் குறைக்கப்பட்டன.அநுரகுமாரவின் 100 நாள் நிர்வாகத்தில் அரிசி, தேங்காய், ஆகிய உணவு பொருட்களின் விலைகள் அமெரிக்க டொலருக்கு நிகரானதாக காணப்படுகிறது.எதிர்க்கட்சி பதவிக்கான பொறுப்பை நாங்கள் சிறந்த முறையில் நிறைவேற்றியுள்ளோம்.கோட்டபய ராசபக்சவின் அரசாங்கத்தில் பிரதான எதிர்க்கட்சியாக செயற்படும் போது நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து பல முறை எடுத்துரைத்தோம்.வங்குரோத்து நிலைமையை தடுக்க சர்வதேச நாணய நிதியத்தை நாடுமாறு வலியுறுத்தினோம் .இருப்பினும் அரசாங்கம் எமது கருத்துக்கு மதிப்பளிக்கவில்லை. இறுதியில் நாடு வங்குரோத்து நிலையடைந்தது” என்றார்.

Advertisement

Advertisement

Advertisement