கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தின் கீழ், 'தூய்மையான மற்றும் பசுமையான எதிர்காலத்தை நோக்கி ஒரு படி' என்ற தொனிப் பொருளில் கிண்ணியா, மட்டக்களப்பு வீதி பிரதான கடற்கரையை சுத்தப்படுத்தி, மரம் நடும் நிகழ்வு இன்று (11) கிண்ணியா , நகரசபை செயலாளர் எம்.கே.அனீஸ் மேற்பார்வையின் கீழ், முன்னெடுக்கப்பட்டது.
UNFPA மற்றும் ADT நிறுவனங்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நற்பணி கப்சோ [GAFSO] தொண்டு நிறுவனத்தினால், இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கடல் மாசுபாடு மற்றும் காடழிப்பு ஆகியவற்றால், ஏற்படும் குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்ள சமூக உறுப்பினர்கள், மற்றும் சுற்றுச்சூழல் அதிகாரிகள் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இதன்போது, தன்னார்வ தொண்டர்கள் கடற்கரையிலிருந்து பிளாஸ்டிக், கண்ணாடி மற்றும் பிற கழிவுப்பொருட்களை அகற்றி, கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாக்கவும், சுத்தமான, பாதுகாப்பான சூழலை உறுதிப்படுத்தவும் பங்களிப்பினைச் செய்தனர்.
மேலும், பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்தவும், காற்றின் தரத்தை மேம்படுத்தவும், காலநிலை மாற்றத்தின் விளைவுகளை எதிர்த்துப் போராடவும் மரக்கன்றுகளும் நடப்பட்டன.
கப்சோ [GAFSO] வின் திட்டப்பணிப்பாளர் A.J. காமில் இம்டாட் தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்வில் கள உத்தியோகத்தர்கள் K.F.மதீனா, S. சுமன் கொண்டார்கள்.
கிண்ணியாவில் கடற்கரையை சுத்தப்படுத்தி மரங்கள் நடுகை கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தின் கீழ், 'தூய்மையான மற்றும் பசுமையான எதிர்காலத்தை நோக்கி ஒரு படி' என்ற தொனிப் பொருளில் கிண்ணியா, மட்டக்களப்பு வீதி பிரதான கடற்கரையை சுத்தப்படுத்தி, மரம் நடும் நிகழ்வு இன்று (11) கிண்ணியா , நகரசபை செயலாளர் எம்.கே.அனீஸ் மேற்பார்வையின் கீழ், முன்னெடுக்கப்பட்டது.UNFPA மற்றும் ADT நிறுவனங்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நற்பணி கப்சோ [GAFSO] தொண்டு நிறுவனத்தினால், இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடல் மாசுபாடு மற்றும் காடழிப்பு ஆகியவற்றால், ஏற்படும் குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்ள சமூக உறுப்பினர்கள், மற்றும் சுற்றுச்சூழல் அதிகாரிகள் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இதன்போது, தன்னார்வ தொண்டர்கள் கடற்கரையிலிருந்து பிளாஸ்டிக், கண்ணாடி மற்றும் பிற கழிவுப்பொருட்களை அகற்றி, கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாக்கவும், சுத்தமான, பாதுகாப்பான சூழலை உறுதிப்படுத்தவும் பங்களிப்பினைச் செய்தனர்.மேலும், பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்தவும், காற்றின் தரத்தை மேம்படுத்தவும், காலநிலை மாற்றத்தின் விளைவுகளை எதிர்த்துப் போராடவும் மரக்கன்றுகளும் நடப்பட்டன.கப்சோ [GAFSO] வின் திட்டப்பணிப்பாளர் A.J. காமில் இம்டாட் தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்வில் கள உத்தியோகத்தர்கள் K.F.மதீனா, S. சுமன் கொண்டார்கள்.