• Apr 27 2025

தீவகத்துக்கும் ஈ.பி.டிபிக்கும் இடையே நெருங்கிய தொடர்பு:வீணைச் சின்னத்தை வெற்றி பெற செய்யுங்கள்- டக்ளஸ் வலியுறுத்து..!

Sharmi / Apr 26th 2025, 6:35 pm
image

நான் நெடுந்தீவுக்கு நன்றியையும்  விசுவாசத்தையும் எதிர்பார்த்து வரவில்லை எனவும்  இந்த நெடுந்தீவு மண்ணில் அன்றொருபொழுது மக்களின் துயர்துடைக்க பதவிகள் இல்லாத எவ்வாறு வந்தேனோ அதேபோன்றுதான் இன்றும் உங்களிடம்  வேறும் டக்ளஸ் தேவானந்தாவாக  வெறுமையாகவே என் மக்களை சந்திப்பதற்காக வந்துள்ளேன் என  ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.  


நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நெடுந்தீவு பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும்  ஏட்வேட் யூலியட் குமார் தலைமையில் ஒன்றைபனையடி 05 ம் வட்டாரத்தில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தீவகத்துக்கும் ஈ.பி.டிபிக்கும் இடையே நெருங்கிய தொடர்பும் நீண்ட வரலாறும் எமக்கு உண்டு.

தீவக பிரதேசங்கள் அனைத்திலும் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் எமது கட்சியினாலேயே முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

அந்த செயற்றிட்டங்களின் தொடர்ச்சியை தடையின்றி தொடர்ந்தும் முன்னெடுத்துச்செல்ல உள்ளுராட்சி மன்ற தேர்தலில் மக்கள் கட்சியின் வீணைச் சின்னத்தை வெற்றிபெறச் செய்து எதிர்காலத்தை தமக்கானதாக உருவாக்கிக் கொள்வார்கள் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


தீவகத்துக்கும் ஈ.பி.டிபிக்கும் இடையே நெருங்கிய தொடர்பு:வீணைச் சின்னத்தை வெற்றி பெற செய்யுங்கள்- டக்ளஸ் வலியுறுத்து. நான் நெடுந்தீவுக்கு நன்றியையும்  விசுவாசத்தையும் எதிர்பார்த்து வரவில்லை எனவும்  இந்த நெடுந்தீவு மண்ணில் அன்றொருபொழுது மக்களின் துயர்துடைக்க பதவிகள் இல்லாத எவ்வாறு வந்தேனோ அதேபோன்றுதான் இன்றும் உங்களிடம்  வேறும் டக்ளஸ் தேவானந்தாவாக  வெறுமையாகவே என் மக்களை சந்திப்பதற்காக வந்துள்ளேன் என  ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.  நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நெடுந்தீவு பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும்  ஏட்வேட் யூலியட் குமார் தலைமையில் ஒன்றைபனையடி 05 ம் வட்டாரத்தில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,தீவகத்துக்கும் ஈ.பி.டிபிக்கும் இடையே நெருங்கிய தொடர்பும் நீண்ட வரலாறும் எமக்கு உண்டு.தீவக பிரதேசங்கள் அனைத்திலும் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் எமது கட்சியினாலேயே முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. அந்த செயற்றிட்டங்களின் தொடர்ச்சியை தடையின்றி தொடர்ந்தும் முன்னெடுத்துச்செல்ல உள்ளுராட்சி மன்ற தேர்தலில் மக்கள் கட்சியின் வீணைச் சின்னத்தை வெற்றிபெறச் செய்து எதிர்காலத்தை தமக்கானதாக உருவாக்கிக் கொள்வார்கள் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement