• Apr 27 2025

வெளியானது உயர்தர பரீட்சை பெறுபேறுகள்..!

Sharmi / Apr 26th 2025, 7:05 pm
image

2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk என்ற இணையதளங்களுக்கு பிரவேசித்து பரீட்சை பெறுபேறுகளை பார்வையிடலாம் என்று பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான உயர் தரப் பரீட்சை கடந்த நவம்பர் மாதம் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை நாடு முழுவதும் 2312 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது. 

இந்த பரீட்சைக்கு மொத்தமாக 333,183 பரீட்சாத்திகள் தோற்றியதுடன், அதில் 253,390 பாடசாலை பரீட்சாத்திகளும் அடங்குவர்  எனவும் தெரிவிக்கப்படுகிறது.



வெளியானது உயர்தர பரீட்சை பெறுபேறுகள். 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளது.இந்நிலையில் www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk என்ற இணையதளங்களுக்கு பிரவேசித்து பரீட்சை பெறுபேறுகளை பார்வையிடலாம் என்று பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.2024 ஆம் ஆண்டுக்கான உயர் தரப் பரீட்சை கடந்த நவம்பர் மாதம் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை நாடு முழுவதும் 2312 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது. இந்த பரீட்சைக்கு மொத்தமாக 333,183 பரீட்சாத்திகள் தோற்றியதுடன், அதில் 253,390 பாடசாலை பரீட்சாத்திகளும் அடங்குவர்  எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement