• Nov 01 2024

இலங்கையில் தேங்காய் தட்டுப்பாடு அடுத்த வருடம் வரை தொடருமென அறிவிப்பு

Chithra / Oct 31st 2024, 9:18 am
image

Advertisement


நாட்டில் தேங்காய் உற்பத்தி வீழ்ச்சி அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வரை தொடரும் என தேங்காய் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தில் தேங்காய் உற்பத்தியில் சடுதியான வீழ்ச்சி காணப்படுவதாக அதன் பணிப்பாளர் நயனி ஆராச்சிகே தெரிவித்துள்ளார்.

உரிய பருவத்தில் மழையின்மை மற்றும் வெப்பநிலை அதிகரிப்பு என்பன தென்னை உற்பத்தி குறைவதற்கு வழிவகுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை, எதிர்பார்த்ததை விட குறைவான விளைச்சலே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டில் நிலவும் தேங்காய் தட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்காக ஏற்றுமதி நோக்கங்களுக்காக தேங்காய்ப்பால் இறக்குமதி செய்வது தொடர்பான யோசனையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு தேங்காய் ஒப்சன் ஊடாக குறிப்பிட்ட அளவு தேங்காய் விற்பனை செய்யப்படும் என தெங்கு அபிவிருத்தி அதிகார சபை பரிந்துரைத்துள்ளது.

தேங்காய் ஏலத்தை 100 ரூபாவிற்கு நடத்துவதற்கு தெங்கு அபிவிருத்தி அதிகார சபைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றார்.

இலங்கையில் தேங்காய் தட்டுப்பாடு அடுத்த வருடம் வரை தொடருமென அறிவிப்பு நாட்டில் தேங்காய் உற்பத்தி வீழ்ச்சி அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வரை தொடரும் என தேங்காய் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தில் தேங்காய் உற்பத்தியில் சடுதியான வீழ்ச்சி காணப்படுவதாக அதன் பணிப்பாளர் நயனி ஆராச்சிகே தெரிவித்துள்ளார்.உரிய பருவத்தில் மழையின்மை மற்றும் வெப்பநிலை அதிகரிப்பு என்பன தென்னை உற்பத்தி குறைவதற்கு வழிவகுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை, எதிர்பார்த்ததை விட குறைவான விளைச்சலே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.நாட்டில் நிலவும் தேங்காய் தட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்காக ஏற்றுமதி நோக்கங்களுக்காக தேங்காய்ப்பால் இறக்குமதி செய்வது தொடர்பான யோசனையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.கொழும்பு தேங்காய் ஒப்சன் ஊடாக குறிப்பிட்ட அளவு தேங்காய் விற்பனை செய்யப்படும் என தெங்கு அபிவிருத்தி அதிகார சபை பரிந்துரைத்துள்ளது.தேங்காய் ஏலத்தை 100 ரூபாவிற்கு நடத்துவதற்கு தெங்கு அபிவிருத்தி அதிகார சபைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றார்.

Advertisement

Advertisement

Advertisement