• Nov 23 2024

வடக்கு, கிழக்கில் இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு கொழும்பிலும் நினைவேந்தல்...! முக்கிய ஒரு திருப்புமுனை...! சுமந்திரன் எம்.பி சுட்டிக்காட்டு...!

Sharmi / May 18th 2024, 9:09 am
image

'வடக்கு, கிழக்கில் போரின் இறுதிக் கட்டத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூருகின்ற இந்த வாரத்தில் நாட்டின் தலைநகரிலும் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறுவது தமிழ் மக்களின் வேதனையில் தெற்கு மக்களும் பங்குகொள்கின்றார்கள் என எண்ணத் தோன்றுவதுடன் இது மிகவும் முக்கிய ஒரு திருப்புமுனையாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் M.A சுமந்திரன் தெரிவித்தார்.

'யுத்தத்தில் பற்றியெரிந்த உள்ளங்களை ஆற்ற மனித நேய நட்பு ரீதியான கூட்டம்' எனும் தொனிப்பொருளில்,  இறுதிப் போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் நேற்று(17) மாலை இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சுமந்திரன் எம்.பி இவ்வாறு தெரிவித்தார்.

'கொடூரமான போரில் மரணித்த அனைவருக்காகவும் இந்த நிகழ்வை தலைநகரில் நடத்துவது மிகவும் ஒரு ஆரோக்கியமான திருப்புமுனை.

15 ஆண்டுகளின் பின்புகூட இப்படியான நிகழ்வு நடப்பது அது திருப்புமுனையின் ஆரம்பம் என்று நான் நினைக்கின்றேன். 2010ஆம் ஆண்டு முதலாவது நினைவு கூரல் எதிர் நோக்கியிருந்தபோதுதான் நான் முதலாவதாக நாடாளுமன்றத்துக்கு வந்து ஓர் உரையாற்றினேன்.

அந்தவேளையிலே கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது. அந்த ஆணைக்குழுவின் பரிந்துரை ஒரு குறித்த தினத்திலே தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்க வேண்டும் என்பது. 

நாங்கள் வடக்கு - கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றவர்கள் என்றபடியால் அந்த யோசனையை வரவேற்றோம். அதிலே சேர்ந்து ஈடுபடுவோம் எனச் சொல்லியிருந்தோம். ஆனால், இதுநாள் வரைக்கும் நிகழவில்லை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் காலிமுகத்திடலிலே மக்களாக 'அறகலய' போராட்டத்தை நடத்தியபோது ஒரு நிகழ்வைச் செய்தார்கள். ஆனால், இன்றைக்கு மரணித்த அனைத்து இலங்கையர்களுக்குமாக இந்த நிகழ்வு இடம்பெறுகின்றது.

வடக்கு, கிழக்கிலேயிருந்து மக்களுடைய நல்லெண்ணத்தை இந்த வேளையிலே உங்களிடத்தில் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். தங்களுடைய வேதனையிலே நீங்களும் பங்குகொள்கின்றீர்கள் என்பது அவர்களுக்கு ஒரு சிறு ஆறுதலை மனதிலே கொடுக்கும் எனவும் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கில் இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு கொழும்பிலும் நினைவேந்தல். முக்கிய ஒரு திருப்புமுனை. சுமந்திரன் எம்.பி சுட்டிக்காட்டு. 'வடக்கு, கிழக்கில் போரின் இறுதிக் கட்டத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூருகின்ற இந்த வாரத்தில் நாட்டின் தலைநகரிலும் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறுவது தமிழ் மக்களின் வேதனையில் தெற்கு மக்களும் பங்குகொள்கின்றார்கள் என எண்ணத் தோன்றுவதுடன் இது மிகவும் முக்கிய ஒரு திருப்புமுனையாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் M.A சுமந்திரன் தெரிவித்தார்.'யுத்தத்தில் பற்றியெரிந்த உள்ளங்களை ஆற்ற மனித நேய நட்பு ரீதியான கூட்டம்' எனும் தொனிப்பொருளில்,  இறுதிப் போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் நேற்று(17) மாலை இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சுமந்திரன் எம்.பி இவ்வாறு தெரிவித்தார்.'கொடூரமான போரில் மரணித்த அனைவருக்காகவும் இந்த நிகழ்வை தலைநகரில் நடத்துவது மிகவும் ஒரு ஆரோக்கியமான திருப்புமுனை.15 ஆண்டுகளின் பின்புகூட இப்படியான நிகழ்வு நடப்பது அது திருப்புமுனையின் ஆரம்பம் என்று நான் நினைக்கின்றேன். 2010ஆம் ஆண்டு முதலாவது நினைவு கூரல் எதிர் நோக்கியிருந்தபோதுதான் நான் முதலாவதாக நாடாளுமன்றத்துக்கு வந்து ஓர் உரையாற்றினேன்.அந்தவேளையிலே கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது. அந்த ஆணைக்குழுவின் பரிந்துரை ஒரு குறித்த தினத்திலே தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்க வேண்டும் என்பது. நாங்கள் வடக்கு - கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றவர்கள் என்றபடியால் அந்த யோசனையை வரவேற்றோம். அதிலே சேர்ந்து ஈடுபடுவோம் எனச் சொல்லியிருந்தோம். ஆனால், இதுநாள் வரைக்கும் நிகழவில்லை.இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் காலிமுகத்திடலிலே மக்களாக 'அறகலய' போராட்டத்தை நடத்தியபோது ஒரு நிகழ்வைச் செய்தார்கள். ஆனால், இன்றைக்கு மரணித்த அனைத்து இலங்கையர்களுக்குமாக இந்த நிகழ்வு இடம்பெறுகின்றது.வடக்கு, கிழக்கிலேயிருந்து மக்களுடைய நல்லெண்ணத்தை இந்த வேளையிலே உங்களிடத்தில் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். தங்களுடைய வேதனையிலே நீங்களும் பங்குகொள்கின்றீர்கள் என்பது அவர்களுக்கு ஒரு சிறு ஆறுதலை மனதிலே கொடுக்கும் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement