மட்டக்களப்பு - வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் பேருந்தும் முச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற அதிசொகுசு பேருந்தே விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று இரவு பதிவாகியுள்ளது.
சுமார் 200 மீற்றர் தூரம் வரை பேருந்து, முச்சக்கர வண்டியை முன்தள்ளி சென்று விபத்துக்குள்ளானதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முச்சக்கர வண்டி முழுமையாக சேதமடைந்ததுடன், பேருந்து பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
சம்பவத்தில் முச்சக்கர வண்டி சாரதி உட்பட நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் முச்சக்கர வண்டி சாரதி மாவடி வேம்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்,
படுகாமடைந்த மூன்று மாணவர்களில் ஒருவர் செங்கலடி வைத்தியசாலையிலும், இருவர் ஏறாவூர் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அவசரமாக மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பில் முச்சக்கர வண்டியை மோதித்தள்ளிய அதிசொகுசு பேருந்து - ஒருவர் பலி; நான்கு பேர் படுகாயம் மட்டக்களப்பு - வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் பேருந்தும் முச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற அதிசொகுசு பேருந்தே விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த சம்பவம் நேற்று இரவு பதிவாகியுள்ளது.சுமார் 200 மீற்றர் தூரம் வரை பேருந்து, முச்சக்கர வண்டியை முன்தள்ளி சென்று விபத்துக்குள்ளானதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.முச்சக்கர வண்டி முழுமையாக சேதமடைந்ததுடன், பேருந்து பகுதியளவில் சேதமடைந்துள்ளது.சம்பவத்தில் முச்சக்கர வண்டி சாரதி உட்பட நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.இந்நிலையில் முச்சக்கர வண்டி சாரதி மாவடி வேம்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்,படுகாமடைந்த மூன்று மாணவர்களில் ஒருவர் செங்கலடி வைத்தியசாலையிலும், இருவர் ஏறாவூர் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அவசரமாக மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.