நீண்டதூர சேவை பேருந்துகள், பயணிகள் தேநீர் அருந்துவதற்காக நிறுத்தப்படும் உணவகங்களில், உணவுகள் மற்றும் பானங்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக விற்கப்பட்டால், அதுகுறித்து முறைப்பாடளிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது.
அந்த அதிகாரசபையின் "1977" என்ற துரித இலக்கத்துக்கு இத்தகைய முறைப்பாடுகளை வழங்குமாறு பொதுமக்கள் கோரப்பட்டுள்ளனர்.
இந்த அறிவுறுத்தல் பெந்தலுவ-பரகடுவ பகுதியில் உள்ள ஓர் உணவகம் தொடர்பாக வந்த முறைப்பாட்டை தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ளது.
அங்கு தண்ணீர் போத்தல்கள் உள்ளிட்ட பொருட்கள் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டமை குறித்து முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, நுகர்வோர் விவகார அதிகாரசபையின் இரத்தினபுரி மாவட்டக் கிளை அதிகாரிகள் சோதனை நடத்தி, உணவக உரிமையாளரை இரத்தினபுரி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதையடுத்து, அவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்டதூர சேவை பேருந்துகள் நிறுத்தும் உணவகங்கள் தொடர்பில் முறைப்பாடு; மக்களுக்கு வந்த அவசர அறிவிப்பு நீண்டதூர சேவை பேருந்துகள், பயணிகள் தேநீர் அருந்துவதற்காக நிறுத்தப்படும் உணவகங்களில், உணவுகள் மற்றும் பானங்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக விற்கப்பட்டால், அதுகுறித்து முறைப்பாடளிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது.அந்த அதிகாரசபையின் "1977" என்ற துரித இலக்கத்துக்கு இத்தகைய முறைப்பாடுகளை வழங்குமாறு பொதுமக்கள் கோரப்பட்டுள்ளனர்.இந்த அறிவுறுத்தல் பெந்தலுவ-பரகடுவ பகுதியில் உள்ள ஓர் உணவகம் தொடர்பாக வந்த முறைப்பாட்டை தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ளது.அங்கு தண்ணீர் போத்தல்கள் உள்ளிட்ட பொருட்கள் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டமை குறித்து முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, நுகர்வோர் விவகார அதிகாரசபையின் இரத்தினபுரி மாவட்டக் கிளை அதிகாரிகள் சோதனை நடத்தி, உணவக உரிமையாளரை இரத்தினபுரி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதையடுத்து, அவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.