• Sep 20 2024

பூரண ஹர்த்தால் - முடங்கியது முஸ்லீம் பகுதி! samugammedia

Chithra / Aug 3rd 2023, 4:44 pm
image

Advertisement

காத்தான்குடி பள்ளிவாயில்களில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் 33 ஆவது வருட நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

இதனை ஒட்டி காத்தான்குடி பிரதேசமெங்கும் இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது அனைத்து நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.

வர்த்தக நிலையங்கள், பொதுச்சந்தைகள், பொது நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.

நகரின் பல இடங்களில் வெள்ளைக் கொடிகள் கட்டப்பட்டு துக்க தினமாகவும் அனுஷ்டிக்கப்படுகிறது.

கடந்த 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூன்றாம் திகதி காத்தான்குடி மீரா ஜும்மா பள்ளிவாயல், காத்தான்குடி ஹுசைனியா பள்ளிவாயல் ஆகிய இரு பள்ளிவாயல்களில் இரவு நேர தொழுகையில் ஈடுபட்டிருந்த 103 முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்டு 268 முஸ்லிம்கள் படுகாயப்படுத்தப்பட்ட சம்பவத்தின் 33 ஆவது நினைவருட நினைவு தினம் இன்று ஆகும்.

இதனை ஒட்டியே இன்றைய தினத்தை காத்தான்குடி மக்கள் துக்கதினமாகவும் அனுஷ்டித்து வருகின்றனர்.

இது தொடர்பாக காத்தான்குடி ஸுசைன்யா பள்ளிவாயல் மற்றும் மீரா ஜும்மா பள்ளிவாயல் ஆகிய இறுதி பள்ளிவாயல்களிலும் விசேட துவா பிரார்த்தனை நிகழ்வுகளும் இடம் பெற்றன.

அதே நேரம் காத்தான்குடி ஷூஹதாக்கள் சதுக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் என்றும் இடம்பெற்றுமை குறிப்பிடத்தக்கது.


பூரண ஹர்த்தால் - முடங்கியது முஸ்லீம் பகுதி samugammedia காத்தான்குடி பள்ளிவாயில்களில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் 33 ஆவது வருட நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.இதனை ஒட்டி காத்தான்குடி பிரதேசமெங்கும் இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது அனைத்து நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.வர்த்தக நிலையங்கள், பொதுச்சந்தைகள், பொது நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.நகரின் பல இடங்களில் வெள்ளைக் கொடிகள் கட்டப்பட்டு துக்க தினமாகவும் அனுஷ்டிக்கப்படுகிறது.கடந்த 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூன்றாம் திகதி காத்தான்குடி மீரா ஜும்மா பள்ளிவாயல், காத்தான்குடி ஹுசைனியா பள்ளிவாயல் ஆகிய இரு பள்ளிவாயல்களில் இரவு நேர தொழுகையில் ஈடுபட்டிருந்த 103 முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்டு 268 முஸ்லிம்கள் படுகாயப்படுத்தப்பட்ட சம்பவத்தின் 33 ஆவது நினைவருட நினைவு தினம் இன்று ஆகும்.இதனை ஒட்டியே இன்றைய தினத்தை காத்தான்குடி மக்கள் துக்கதினமாகவும் அனுஷ்டித்து வருகின்றனர்.இது தொடர்பாக காத்தான்குடி ஸுசைன்யா பள்ளிவாயல் மற்றும் மீரா ஜும்மா பள்ளிவாயல் ஆகிய இறுதி பள்ளிவாயல்களிலும் விசேட துவா பிரார்த்தனை நிகழ்வுகளும் இடம் பெற்றன.அதே நேரம் காத்தான்குடி ஷூஹதாக்கள் சதுக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் என்றும் இடம்பெற்றுமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement