• Nov 10 2024

சங்குக்கு முழுமையான ஆதரவு! - கிழக்கு மாகாண காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் அறிவிப்பு

Chithra / Sep 17th 2024, 3:06 pm
image

 

தமிழர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளையும் காணாமல்ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கோரிக்கையினையும் இந்த நாட்டிற்கும் சர்வதேசத்திற்கும் கொண்டுசெல்வதற்கு சிறந்த வாய்ப்பாக தமிழ் பொதுவேட்பாளர் காணப்படுவதனால் சங்கு சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இன்று  மட்டு.ஊடக அமையத்தில் கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவிகளால் ஊடக சந்திப்பு நடாத்தப்பட்டது.

இந்த ஊடக சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட தலைவி அ.அமலநாயகி, திருகோணமாலை மாவட்ட தலைவி திருமதி செபஸ்டியான் தேவி,அம்பாறை மாவட்ட தலைவி திருமதி த.தேவராணி ஆகியோர் கலந்துகொண்டு தமது பொதுவேட்பாளருக்கான ஆதரவு கருத்துகளை முன்வைத்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி அ.அமலநாயகி,

எங்களுடைய உறவுகளுக்கு நீதி கேட்டு இந்த சிங்கள அரசின் தலைமைகள் ஊடாக உறவுகளை தேடி 15 வருடங்கள் கடந்து நிலையிலும் எந்த ஒரு துளியேனும் தங்களுக்கான தீர்வு வராத பட்சத்தில் நாங்கள் ஒவ்வொரு நாளும் கண்ணீரோடும் வேதனையோடும் இலங்கை அரசாங்கத்தின் நம்பிக்கை இல்லாமல் சர்வதேச ஒருமுறையை நோக்கி நாங்கள் பயணிக்கும் இந்த வேளையில்,

ஒரு தமிழராக தமிழினத்திற்காக சங்கு என்னும் நமது அடையாள சின்னத்தை எமது மக்களுக்காக அனைவரும் சேர்ந்து இந்த கட்டமைப்பை உருவாக்கி தமிழ் இனத்தை தக்க வைத்துக் கொள்வதற்கான ஒரு காலமாக இந்த ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழ் வேட்பாளர் அரியநேத்திரனை  சங்கு சின்னத்தில் போட்டியிடுவதற்காக நியமிக்கப்பட்டு இருக்கின்றது.

 கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு பிற்பாடு 21,000  உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள் அவர்களுக்கு இந்த இலங்கை அரசினால் எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை.

21000 குடும்பங்களை சேர்ந்த அனைத்து பாதிக்கப்பட்ட மக்களும் ஒரு ஒடுக்கப்பட்ட இனமாக உரிமை மீறப்பட்ட ஒரு இனமாக அனைவரும் இந்த சங்கு சின்னத்திற்கு மாத்திரம் புள்ளடியிட்டு எங்களுடைய தமிழ் இருப்பை தக்க வைக்க வேண்டும்.  என்றார்.

திருகோணமலை மாவட்ட வழிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத் தலைவி செபஸ்தியான் தேவி கருத்து தெரிவிக்கையில்,

நாங்கள் 15 வருடமாக வீதியில் போராடி வருகின்றோம். இதுவரையில் எங்களுக்கான சரியான தீர்வை எந்த அரசாங்கமும் பெற்று தரவில்லை.

ஜனாதிபதி கடந்த 13 ஆம் திகதி கொழும்பில் ஒரு கூட்டத்தினை நடத்தி இருக்கின்றார். அதில்    காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்திற்கு வருகின்ற மூன்று வருடத்திற்குள் தீர்வையும் கொடுத்து போர் குற்றத்தில் உள்ளவர்களை அடையாளப்படுத்துவேன் என கூறி இருக்கின்றார்.

ஏன் அவர் இந்த தருணத்தில் கூறுகின்றார்.  எட்டு ஜனாதிபதி வந்து சென்று விட்டார்கள். எங்களுக்கான ஒரு நீதியும் இவ்வளவு காலமும் பெற்று தரவில்லை.

பொது வேட்பாளரை நிறுத்தி இருக்கின்றதனால் அவருக்கு அந்த வாக்கு சென்று விடும் என்கின்ற நரி தந்திரத்தை பயன்படுத்தி நரியாக எங்களை அந்தப் பக்கம் திசை திருப்புகின்றார்.

கோயில்கள் அபகரிப்பு, நிலங்கள் அபகரிப்பு, தமிழ் மக்களின் சொத்துக்களை முடக்குவது, இதனையே இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

இந்த தருணத்தில் நாங்கள் அறியநேந்திரனுக்கு வாக்களிப்போம்.

எங்களுக்கான நீதியை சர்வதேச ஊடாக இவர் பெற்றுத் தருவார் என்று தான் இவரை நாங்கள் நம்பி இருக்கின்றோம்.

அதுமாத்திரமல்ல நாங்கள் இவ்வளவு காலமும் 250க்கு மேற்பட்ட தாய்மாரை இழந்து இருக்கின்றோம் .

எங்களுக்கான நீதியை சர்வதேசத்தின் ஊடாக பெற்று தர எல்லோரும் முன்வர வேண்டும்.

நாங்கள்  நிதியை கேட்கவில்லை நீதி ஒன்றையே   கேட்டு நிற்கின்றோம். என்றார்.


சங்குக்கு முழுமையான ஆதரவு - கிழக்கு மாகாண காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் அறிவிப்பு  தமிழர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளையும் காணாமல்ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கோரிக்கையினையும் இந்த நாட்டிற்கும் சர்வதேசத்திற்கும் கொண்டுசெல்வதற்கு சிறந்த வாய்ப்பாக தமிழ் பொதுவேட்பாளர் காணப்படுவதனால் சங்கு சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.இன்று  மட்டு.ஊடக அமையத்தில் கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவிகளால் ஊடக சந்திப்பு நடாத்தப்பட்டது.இந்த ஊடக சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட தலைவி அ.அமலநாயகி, திருகோணமாலை மாவட்ட தலைவி திருமதி செபஸ்டியான் தேவி,அம்பாறை மாவட்ட தலைவி திருமதி த.தேவராணி ஆகியோர் கலந்துகொண்டு தமது பொதுவேட்பாளருக்கான ஆதரவு கருத்துகளை முன்வைத்தனர்.இதன்போது கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி அ.அமலநாயகி,எங்களுடைய உறவுகளுக்கு நீதி கேட்டு இந்த சிங்கள அரசின் தலைமைகள் ஊடாக உறவுகளை தேடி 15 வருடங்கள் கடந்து நிலையிலும் எந்த ஒரு துளியேனும் தங்களுக்கான தீர்வு வராத பட்சத்தில் நாங்கள் ஒவ்வொரு நாளும் கண்ணீரோடும் வேதனையோடும் இலங்கை அரசாங்கத்தின் நம்பிக்கை இல்லாமல் சர்வதேச ஒருமுறையை நோக்கி நாங்கள் பயணிக்கும் இந்த வேளையில்,ஒரு தமிழராக தமிழினத்திற்காக சங்கு என்னும் நமது அடையாள சின்னத்தை எமது மக்களுக்காக அனைவரும் சேர்ந்து இந்த கட்டமைப்பை உருவாக்கி தமிழ் இனத்தை தக்க வைத்துக் கொள்வதற்கான ஒரு காலமாக இந்த ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழ் வேட்பாளர் அரியநேத்திரனை  சங்கு சின்னத்தில் போட்டியிடுவதற்காக நியமிக்கப்பட்டு இருக்கின்றது. கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு பிற்பாடு 21,000  உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள் அவர்களுக்கு இந்த இலங்கை அரசினால் எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை.21000 குடும்பங்களை சேர்ந்த அனைத்து பாதிக்கப்பட்ட மக்களும் ஒரு ஒடுக்கப்பட்ட இனமாக உரிமை மீறப்பட்ட ஒரு இனமாக அனைவரும் இந்த சங்கு சின்னத்திற்கு மாத்திரம் புள்ளடியிட்டு எங்களுடைய தமிழ் இருப்பை தக்க வைக்க வேண்டும்.  என்றார்.திருகோணமலை மாவட்ட வழிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத் தலைவி செபஸ்தியான் தேவி கருத்து தெரிவிக்கையில்,நாங்கள் 15 வருடமாக வீதியில் போராடி வருகின்றோம். இதுவரையில் எங்களுக்கான சரியான தீர்வை எந்த அரசாங்கமும் பெற்று தரவில்லை.ஜனாதிபதி கடந்த 13 ஆம் திகதி கொழும்பில் ஒரு கூட்டத்தினை நடத்தி இருக்கின்றார். அதில்    காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்திற்கு வருகின்ற மூன்று வருடத்திற்குள் தீர்வையும் கொடுத்து போர் குற்றத்தில் உள்ளவர்களை அடையாளப்படுத்துவேன் என கூறி இருக்கின்றார்.ஏன் அவர் இந்த தருணத்தில் கூறுகின்றார்.  எட்டு ஜனாதிபதி வந்து சென்று விட்டார்கள். எங்களுக்கான ஒரு நீதியும் இவ்வளவு காலமும் பெற்று தரவில்லை.பொது வேட்பாளரை நிறுத்தி இருக்கின்றதனால் அவருக்கு அந்த வாக்கு சென்று விடும் என்கின்ற நரி தந்திரத்தை பயன்படுத்தி நரியாக எங்களை அந்தப் பக்கம் திசை திருப்புகின்றார்.கோயில்கள் அபகரிப்பு, நிலங்கள் அபகரிப்பு, தமிழ் மக்களின் சொத்துக்களை முடக்குவது, இதனையே இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.இந்த தருணத்தில் நாங்கள் அறியநேந்திரனுக்கு வாக்களிப்போம்.எங்களுக்கான நீதியை சர்வதேச ஊடாக இவர் பெற்றுத் தருவார் என்று தான் இவரை நாங்கள் நம்பி இருக்கின்றோம்.அதுமாத்திரமல்ல நாங்கள் இவ்வளவு காலமும் 250க்கு மேற்பட்ட தாய்மாரை இழந்து இருக்கின்றோம் .எங்களுக்கான நீதியை சர்வதேசத்தின் ஊடாக பெற்று தர எல்லோரும் முன்வர வேண்டும்.நாங்கள்  நிதியை கேட்கவில்லை நீதி ஒன்றையே   கேட்டு நிற்கின்றோம். என்றார்.

Advertisement

Advertisement

Advertisement