• Nov 28 2024

உத்தரபிரதேசில் இரு குழுக்களுக்கு இடையே மோதல்; ஒருவர் மரணம்

Tharmini / Oct 14th 2024, 1:48 pm
image

உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்ட மஹாசி பகுதியில் துர்கா சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (13) ஏற்பட்டுள்ளது. இந்தியப் பொலிஸாரின் கூற்றுப்படி, ஊர்வலம் ஒரு முஸ்லிம் பகுதி வழியாகச் சென்றபோது, ​​​​இரு குழுக்களும் சில விடயங்களில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து இரு குழுக்களுக்கு இடையிலும் மோதல் ஆரம்பமானது.சம்பவத்தை அடுத்து, மக்கள் பல வாகனங்களுக்கு தீ வைத்ததால் பதற்றம் நிலவியது, நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தினார்.

பொலிஸார் குறைந்தது 30 பேரை கைது செய்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்களில் கலவரத்தின் போது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டார் என குற்றம் சாட்டப்பட்ட நபரும் அடங்குவார். உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் இந்த சம்பவத்தை கவனத்தில் கொண்டு குற்றவாளிகள் சட்டத்தில் இருந்து தப்ப முடியாது என்று கூறினார்.

உத்தரபிரதேசில் இரு குழுக்களுக்கு இடையே மோதல்; ஒருவர் மரணம் உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்ட மஹாசி பகுதியில் துர்கா சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (13) ஏற்பட்டுள்ளது. இந்தியப் பொலிஸாரின் கூற்றுப்படி, ஊர்வலம் ஒரு முஸ்லிம் பகுதி வழியாகச் சென்றபோது, ​​​​இரு குழுக்களும் சில விடயங்களில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதையடுத்து இரு குழுக்களுக்கு இடையிலும் மோதல் ஆரம்பமானது.சம்பவத்தை அடுத்து, மக்கள் பல வாகனங்களுக்கு தீ வைத்ததால் பதற்றம் நிலவியது, நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தினார்.பொலிஸார் குறைந்தது 30 பேரை கைது செய்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்களில் கலவரத்தின் போது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டார் என குற்றம் சாட்டப்பட்ட நபரும் அடங்குவார். உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் இந்த சம்பவத்தை கவனத்தில் கொண்டு குற்றவாளிகள் சட்டத்தில் இருந்து தப்ப முடியாது என்று கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement