வவுனியாவில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவின் பிரச்சார கூட்டம் நேற்றைய தினம்(03)இடம்பெற்றது.
இதன்போது, முன்னாள் முஸ்லீம் அமைச்சர் ஒருவருக்கு ஆதரவாக வந்திருந்த பொதுமக்கள் சிலருக்கு தண்ணீர் போத்தல்கள் வழங்கப்படவில்லை என்றும், தம்மை அழைத்து வந்தவர்கள் தமக்கு அழைத்து வரும்போது தண்ணீர் போத்தல்கள் தராமல் விடுத்து இங்கு வந்து இனம் சார்ந்து செயல்படுகிறார்கள் என குற்றச்சாட்டை வைத்திருந்தனர்.
இதேவேளை, குறித்த முரண்பாட்டை காணொளியாக்கிக்கொண்டிருந்த ஊடகவியலாளர்களை அதனை எடுக்க வேண்டாம் என்று சிலர் தடுத்திருந்ததுடன், கடந்த சில தினங்களுக்கு முன்னர் முன்னாள் முஸ்லீம் அமைச்சர் தொடர்பாக பிரசுரிக்கப்பட்ட செய்தியை உதாரணம் காட்டி, குறித்த செய்தியை ஏன் பிரசுரித்தீர்கள் என்றும் கேள்வி எழுப்பி ஊடகவியலாளர்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்டனர்.
இதன் போது ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட பிரதான அமைப்பாளர் திருமதி ரசிக்கா தலையிட்டு நிலைமையை சுமுகமாக்கி இருந்தார்.
வவுனியா சஜித்தின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பம். வவுனியாவில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவின் பிரச்சார கூட்டம் நேற்றைய தினம்(03) இடம்பெற்றது.இதன்போது, முன்னாள் முஸ்லீம் அமைச்சர் ஒருவருக்கு ஆதரவாக வந்திருந்த பொதுமக்கள் சிலருக்கு தண்ணீர் போத்தல்கள் வழங்கப்படவில்லை என்றும், தம்மை அழைத்து வந்தவர்கள் தமக்கு அழைத்து வரும்போது தண்ணீர் போத்தல்கள் தராமல் விடுத்து இங்கு வந்து இனம் சார்ந்து செயல்படுகிறார்கள் என குற்றச்சாட்டை வைத்திருந்தனர்.இதேவேளை, குறித்த முரண்பாட்டை காணொளியாக்கிக்கொண்டிருந்த ஊடகவியலாளர்களை அதனை எடுக்க வேண்டாம் என்று சிலர் தடுத்திருந்ததுடன், கடந்த சில தினங்களுக்கு முன்னர் முன்னாள் முஸ்லீம் அமைச்சர் தொடர்பாக பிரசுரிக்கப்பட்ட செய்தியை உதாரணம் காட்டி, குறித்த செய்தியை ஏன் பிரசுரித்தீர்கள் என்றும் கேள்வி எழுப்பி ஊடகவியலாளர்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்டனர். இதன் போது ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட பிரதான அமைப்பாளர் திருமதி ரசிக்கா தலையிட்டு நிலைமையை சுமுகமாக்கி இருந்தார்.