• Dec 06 2024

யாழில் மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய தந்தை கைது..!

Sharmi / Sep 4th 2024, 12:48 pm
image

யாழ்ப்பாணம், இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் பகுதியில் 10 வயது மகளை பல நாட்களாக பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த தந்தை ஒருவர் இன்றையதினம்(04) இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் பண்ணாகம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் தனது மகளை பல நாட்களாக பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார்.

அந்தவகையில் இது குறித்து இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய  தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவரை  நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


யாழில் மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய தந்தை கைது. யாழ்ப்பாணம், இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் பகுதியில் 10 வயது மகளை பல நாட்களாக பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த தந்தை ஒருவர் இன்றையதினம்(04) இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபர் பண்ணாகம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் தனது மகளை பல நாட்களாக பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார்.அந்தவகையில் இது குறித்து இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய  தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவரை  நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement