• May 18 2024

சாணக்கியன் நீ ஒரு கொட்டியா (புலி) என அமைச்சர் தெரிவித்த நிலையில் சபையில் குழப்பம்...!samugammedia

Sharmi / Apr 25th 2023, 12:28 pm
image

Advertisement

சாணக்கியனை அமைச்சர் மனுச நாணயக்கார கொட்டியா அதாவது புலி என குறிப்பிட்டுள்ளதை இந்த சபை ஏற்றுக்கொண்டு பிரதி சபாநாயகர் அமைதியாக இருப்பதால் இந்த அரசாங்கத்தின் இனவாத முகம் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தள்ளார்.

போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தனவிடம் சாணக்கியன் கேள்வி எழுப்ப முற்பட்டபோது பிரதி சபாநாயகர் அதற்கு இடமளிக்காத நிலையில் சாணக்கியன் நீண்ட நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து சாணக்கியன் சபையில் இருந்து வெளியேறியிருந்தார்.

இதனை தொடர்ந்து கருத்து வெளியிட்ட அமைச்சர் மனுச நாணயக்கார சாணக்கியனை புலி என்றும் புலி வெளியேறி விட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இதன்போது ஒழுங்கு பிரச்சனை மூலம் குறிக்கிட்ட சுமந்திரன் சக நாடாளுமன்ற உறுப்பினரை புலி என கூறுவதை இந்த சபை ஏற்றுக்கொண்டுள்ளதாக என கேள்வி எழுப்பியிருந்தார்.

சாணக்கியன் விசேடமான கேள்வி ஒன்றை முன்வைக்கும் போது அவரை கொட்டியா என்று அதாவது புலி என்று கூறுவதாக சுமந்திரன் குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்நிலையில் சாணக்கியனை புலி என்று கூறியதை அனுமதிக்கவில்லை என்றும் இதனை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாக பிரதி சபாநாயகர் தெரிவித்திருந்தார்.

சாணக்கியன் நீ ஒரு கொட்டியா (புலி) என அமைச்சர் தெரிவித்த நிலையில் சபையில் குழப்பம்.samugammedia சாணக்கியனை அமைச்சர் மனுச நாணயக்கார கொட்டியா அதாவது புலி என குறிப்பிட்டுள்ளதை இந்த சபை ஏற்றுக்கொண்டு பிரதி சபாநாயகர் அமைதியாக இருப்பதால் இந்த அரசாங்கத்தின் இனவாத முகம் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தள்ளார்.போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தனவிடம் சாணக்கியன் கேள்வி எழுப்ப முற்பட்டபோது பிரதி சபாநாயகர் அதற்கு இடமளிக்காத நிலையில் சாணக்கியன் நீண்ட நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்.இதனை தொடர்ந்து சாணக்கியன் சபையில் இருந்து வெளியேறியிருந்தார்.இதனை தொடர்ந்து கருத்து வெளியிட்ட அமைச்சர் மனுச நாணயக்கார சாணக்கியனை புலி என்றும் புலி வெளியேறி விட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.இந்நிலையில் இதன்போது ஒழுங்கு பிரச்சனை மூலம் குறிக்கிட்ட சுமந்திரன் சக நாடாளுமன்ற உறுப்பினரை புலி என கூறுவதை இந்த சபை ஏற்றுக்கொண்டுள்ளதாக என கேள்வி எழுப்பியிருந்தார்.சாணக்கியன் விசேடமான கேள்வி ஒன்றை முன்வைக்கும் போது அவரை கொட்டியா என்று அதாவது புலி என்று கூறுவதாக சுமந்திரன் குற்றம் சுமத்தியிருந்தார்.இந்நிலையில் சாணக்கியனை புலி என்று கூறியதை அனுமதிக்கவில்லை என்றும் இதனை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாக பிரதி சபாநாயகர் தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement