• Nov 08 2024

த.வெ.க. மாநாட்டில் ஒருவர் உயிரிழப்பு - 90ற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதி!

Tamil nila / Oct 27th 2024, 10:40 pm
image

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாவது மாநாடு இன்று மாலை இடம்பெற்றது. 

 மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்ற குறித்த மாநாட்டுக்கு அதிகளவானோர் வருகைதந்திருந்தனர்.

 இந்தநிலையில் மாநாடு நிறைவடைந்த பின்னர் பெரும் திரளானோர் ஒரே நேரத்தில் வெளியேற முற்பட்டதால் அதிக நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

 இதன் போது மாநாட்டில் மயங்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

 மேலும் குறித்த மாநாட்டின்போது மயங்கி விழுந்த 90ற்கும் மேற்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

த.வெ.க. மாநாட்டில் ஒருவர் உயிரிழப்பு - 90ற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாவது மாநாடு இன்று மாலை இடம்பெற்றது.  மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்ற குறித்த மாநாட்டுக்கு அதிகளவானோர் வருகைதந்திருந்தனர். இந்தநிலையில் மாநாடு நிறைவடைந்த பின்னர் பெரும் திரளானோர் ஒரே நேரத்தில் வெளியேற முற்பட்டதால் அதிக நெரிசல் ஏற்பட்டுள்ளது.  இதன் போது மாநாட்டில் மயங்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.  மேலும் குறித்த மாநாட்டின்போது மயங்கி விழுந்த 90ற்கும் மேற்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement