பத்தாவது பாராளுமன்றத்தில் ஏழு துறைசார் மேற்பார்வைக் குழுக்களை ஸ்தாபிப்பதற்கும் அவற்றில் மூன்று குழுக்களின் தலைமையை எதிர்க்கட்சிக்கும் நான்கு குழுக்களின் தலைமையை ஆளும் கட்சிக்கும் வழங்குவதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இணக்கம் வழங்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
துறைசார் மேற்பார்வைக் குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பில் மீளாய்வு செய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைக்கு அமைய இவ்வாறு பத்தாவது பாராளுமன்றத்தில் அனைத்து அமைச்சுக்களினதும் விடயப்பொறுப்புக்கள் உள்ளடங்கும் வகையில் ஏழு துறைசார் மேற்பார்வைக் குழுக்களை ஸ்தாபிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பத்தாவது பாராளுமன்றத்தில் இயலாமையுடைய நபர்கள் தொடர்பில் செயற்படக்கூடிய பாராளுமன்ற ஒன்றியத்தை ஸ்தாபிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்களான சுகத் வசந்த த சில்வா மற்றும் (வைத்தியர்) பத்மநாதன் சத்தியலிங்கம் ஆகியோர் விடுத்த கோரிக்கைக்கு குழுவின் அனுமதி வழங்கப்பட்டதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் ஏழு துறைசார் மேற்பார்வைக் குழுக்களை ஸ்தாபிக்க இணக்கம் பத்தாவது பாராளுமன்றத்தில் ஏழு துறைசார் மேற்பார்வைக் குழுக்களை ஸ்தாபிப்பதற்கும் அவற்றில் மூன்று குழுக்களின் தலைமையை எதிர்க்கட்சிக்கும் நான்கு குழுக்களின் தலைமையை ஆளும் கட்சிக்கும் வழங்குவதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இணக்கம் வழங்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.துறைசார் மேற்பார்வைக் குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பில் மீளாய்வு செய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைக்கு அமைய இவ்வாறு பத்தாவது பாராளுமன்றத்தில் அனைத்து அமைச்சுக்களினதும் விடயப்பொறுப்புக்கள் உள்ளடங்கும் வகையில் ஏழு துறைசார் மேற்பார்வைக் குழுக்களை ஸ்தாபிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.அத்துடன், பத்தாவது பாராளுமன்றத்தில் இயலாமையுடைய நபர்கள் தொடர்பில் செயற்படக்கூடிய பாராளுமன்ற ஒன்றியத்தை ஸ்தாபிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்களான சுகத் வசந்த த சில்வா மற்றும் (வைத்தியர்) பத்மநாதன் சத்தியலிங்கம் ஆகியோர் விடுத்த கோரிக்கைக்கு குழுவின் அனுமதி வழங்கப்பட்டதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார்.